முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஈரான் அரசு அவசர அறிவிப்பை கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 நாட்கள் நடந்த வான்வழி போரைத் தொடர்ந்து, இன்று இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேசமயம் அமெரிக்காவும் தனது தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளை மீண்டும் பதற்றமான சூழலுக்கு தள்ளியுள்ளது. இது ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளுடன் இருந்த தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை மற்றும் தீர்வுக்கான நம்பிக்கையையும் முற்றிலும் சிதைத்துள்ளது.

முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?

ஈரானுக்குள் இருக்கும் இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஈரானும் ஒரு மிகக் கடுமையான பதிலடிக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, புவிசார் அரசியல் பதற்றங்களையும் முதலீட்டாளர்கள் மத்தியிலான நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, வரும் திங்கட்கிழமை வர்த்தகம் தொடங்கும்போது பங்குச் சந்தை, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலைகளில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தங்கம், வெள்ளி விலையானது கேப் அப் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச் சந்தைகள் மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்திக்கலாம். கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான ஏற்றம் இருக்கலாமென நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
குறிப்பாக சர்வதேச பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய பங்குச் சந்தைகள் ஏற்கனவே செல்லிங் அழுத்தத்தில் காணப்படும் சூழலில், இப்பிரச்சனையானது இன்னும் ரத்த களரியாக மாற்றலாம். முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறி, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை செய்யலாம். பங்குச் சந்தைகள் வரும் திங்கட்கிழமை அன்று கேப் டவுன் ஆகி தொடங்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படி இல்லையேல் கடுமையான வீழ்ச்சி இருக்கலாம்.

இப்பிரச்சனையானது இன்னும் பூதகரமாகலாம் என்ற சூழலே தற்போதைய நிலையில் தெரிகிறது. ஆக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மிக கவனமுடன் இருப்பது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+