பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் எஃப்எம்சிஜி துறையை சேர்ந்த நெஸ்லே இந்தியா மற்றும் இந்துஸ்தான்யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் இன்று தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியிட்டுள்ளன. மேலும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டும் அறிவித்துள்ளன.
பிரபலமான மேகி நூடுல்ஸ் முதல் மில்கி பார் சாக்லேட் வரையிலான பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம்தான் நெஸ்லே இந்தியா. 2025 மார்ச் காலாண்டில் நெஸ்லே இந்தியா தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.885 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5.2 சதவீதம் குறைவாகும். அதேசமயம் கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.5,504 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 4.5 சதவீதம் அதிகமாகும்.

நெஸ்லே இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.10 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. மேலும், டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கு 2025 ஜூலை 4ம் தேதியை பதிவு தேதியாக நிர்ணயம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் கலவையாக இருந்ததால், மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே நெஸ்லே இந்தியா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.31 சதவீதம் குறைந்து ரூ.2,426.70ஆக இருந்தது.
ஹமாம் மற்றும் லக்ஸ் போன்ற பிரபல குளியல் சோப்புகள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,493 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.7 சதவீதம் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிகர லாபமாக ரூ.2,406 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
2025 மார்ச் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.15,214 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.14.857 கோடி ஈட்டியிருந்தது.
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.24 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இதுதவிர இந்நிறுவனம் கடந்த நவம்பரில் இடைக்கால டிவிடெண்டாக ரூ.19ம், கடந்த சிறப்பு டிவிடெண்டாக ரூ.10 வழங்கியது. இதன்படி, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.53 டிவிடெண்டாக வழங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4 சதவீதம் குறைந்து ரூ.2,325.25 ஆக இருந்தது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 1 சதவீதம் குறைந்துள்ளது.
அசால்டா அடிச்சு தூள் கிளப்பும் ஐசிஐசிஐ வங்கி... அதிர்ச்சியில் எச்டிஎஃப்சி வங்கி
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications