நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.1,614 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3.7 சதவீதம் குறைவாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,677 கோடி ஈட்டியிருந்தது.
வருவாய்
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.17,940 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 1.5 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.17,671 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் வருவாயில் பெரிய வளர்ச்சி இல்லாதது மற்றும் நிகர லாபம் சரிவு கண்டது போன்ற காரணங்களால் இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

ஒதுக்கீடு
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.21 (210 சதவீதம்) டிவிடெண்டு அறிவித்துள்ளது. இது பங்குதாரரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலையான நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சியை நோக்கிய மூலோபாய முதலீடுகளுக்காக நடப்பு நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 1.53 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 4 சதவீதத்துக்கு மேல் குறைவாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 1.60 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
விற்பனை
உள்நாட்டில் விற்பனை சரிவு கண்டுள்ளபோதிலும், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மொத்தம் 38,100 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 14 சதவீத வளர்ச்சியாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 33,400 வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.29 சதவீதம் உயர்ந்து ரூ.1,859.95ஆக அதிகரித்தது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார அதிகபட்ச விலை அருகில் உள்ளது. எதிர்வரும் வர்த்தக தினங்களில் இந்நிறுவன பங்கு விரைவில் புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன்களை அமெரிக்காவில் தயாரித்தால் அவங்க நாட்டு மக்களே வாங்க மாட்டாங்க.. என்ன காரணம் தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications