இந்திய இ-காமர்ஸ் சந்தையில் ஜாம்பவானாக திகழும் பிளிப்கார்ட் (Flipkart), தற்போது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. அது அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் (Walmart) கட்டுப்பாட்டில் உள்ள பிளிப்கார்ட், தனது நிறுவனத்தின் தலைமையகத்தை சிங்கப்பூரிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கே மாற்றியுள்ளது. இந்திய பங்குச் சந்தையில் தனது பங்குகளை பட்டியலிடும் (IPO) நோக்கில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான கட்டமைப்பு மாற்றம் இது எனலாம்.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மறுசீரமைப்புக்கு இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்த மறுசீரமைப்பு மூலம் பிளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் தற்போது பிளிப்கார்ட் குழுமத்தின் முதன்மை நிறுவனமாக மாறியுள்ளது. இது இந்தியா மீதான எங்கள் நீண்டகால அர்ப்பணிப்பை காட்டுகிறது. ஒரு முழுமையான இந்திய நிறுவனமாக அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்க ஆர்வமாக உள்ளோம் என கூறியுள்ளது.

தொடக்க காலத்தில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சர்வதேச முதலீடுகளை எளிதாக ஈர்ப்பதற்காக, தங்கள் தலைமையகங்களை சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மாற்றும் வழக்கத்தை கொண்டிருந்தன. அந்த வகையில், 2007-ல் பெங்களூருவில் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சாலால் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட், தனது கட்டமைப்பை சிங்கப்பூருக்கு மாற்றியது. ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவுக்கே மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?
தற்போது இந்திய மூலதனச் சந்தை மிகவும் வலுவடைந்துள்ள சூழலில், இங்கே பட்டியலிடப்படுவது அதிக லாபகரமானதாக மாறியுள்ளது. வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதில் இருந்து சட்ட ரீதியான தடைகளை நீக்கவே, இந்த தாயகத் திரும்புதல் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் பொதுப் பங்கு வெளியீட்டை கொண்டு வருவதற்காக, கோல்ட்மேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, ஜேபி மோர்கன் மற்றும் கோடக் மஹிந்திரா கேபிடல் போன்ற முன்னணி முதலீட்டு வங்கிகளுடன் பிளிப்கார்ட் ஆரம்பக்கட்ட ஆலோசனைகளை தொடங்கியுள்ளது. சந்தை நிலவரங்கள் மற்றும் நிறுவனத்தின் நிலையை பொறுத்து, 2026-ன் இறுதி அல்லது 2027-ல் இந்த ஐபிஓ வெளியிடப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெரைட்டி டிஷ் எல்லாம் இல்ல! கேஸ் தட்டுப்பாட்டால் சென்னை ஹோட்டல்களுக்கு வந்த சோதனை!
கடந்த 2018-ல் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட்டின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. இது இந்திய சில்லறை வர்த்தகத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அந்நிய முதலீடாகும். இன்று பிளிப்கார்ட் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.1.6 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையாளர்களை உள்ளடக்கியுள்ளது. அதன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான எக்கார்ட் மூலம் இந்தியாவின் 22,000-க்கும் மேற்பட்ட பின்கோடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறது.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
பிளிப்கார்ட்டின் இந்த முடிவு, இந்திய ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தில் ஒரு புதிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து தங்கள் கட்டமைப்பை இந்தியாவிற்கு மாற்ற ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய சந்தையின் வளர்ச்சியை உணர்த்தும் இந்த நகர்வு, முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications