தங்கம் விலை சர்வதேச சந்தையில் இரண்டு மாத உயர்வை பதிவு செய்த பின், இன்று கணிசமான முதலீட்டாளர்களின் விற்பனை காரணமாக கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது. இன்றைய சரிவுக்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் 2023 இன் எஞ்சிய காலத்தில் வட்டி விகிதத்தின் கண்ணோட்டத்தைப் பற்றி பேச உள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை வெளியேற்றினர்.

இதேவேளையில் காசா மருத்துவமனை குண்டுவெடிப்புக்குப் பிறகு மத்திய கிழக்கு சந்சையில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கம் விலை உயர் நின்றுவிட்டது என கூற முடியாது. காசா மருத்துவமனை தாக்குதல் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பொது மக்கள் மத்தியில் அமைதியின்மை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் நாட்டுக்கு சென்ற அமெரிக்கா திரும்பினார், இவருடைய பயணத்தில் காசா பகுதியில் உள்ள மக்களுக்கு அவசர கால அடிப்படையில் நிதி உதவிகளை அறிவித்தார்.
மேலும் ஜோ பைடன் தனது பயணத்தில் உலக நாடுகளுக்கு மிகவும் தெளிவாக அமெரிக்கா இஸ்ரேலுடன் நிற்கிறது என்றும், ஹமாஸின் தாக்குதல்களுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளத் இஸ்ரேல்-க்கு தேவையான அனைத்தையும் அந்நாட்டிற்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இது முதலீட்டு சந்தையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் வாயிலாக தங்கம் விலை சர்வதேச சந்தையில் மந்த நிலையை எதிர்கொண்டது. இன்று வர்த்தக துவக்கத்தில் இருந்து 1953 டாலரில் இருந்து 1950 டாலர் வரையில் வர்த்தகம் அடைந்து வருகிறது. இதேவேளையில் நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் சரிவுடன் முடிந்தது. டாவ் ஜோன்ஸ் குறியீடு 0.98 சதவீதம் வரையிலும், எஸ் அண்ட் பி 500 1.34 சதவீதமும் சரிந்தது.

இதன் தாக்கம் ஆசிய சந்தையிலும் எதிரொலித்துள்ளது, மும்பை பங்குச்சந்தை, ஜப்பான், சீனா, ஷாங்காய், ஆஸ்திரேலியா போன்ற முன்னணி சந்தைகள் சரிவுடன் முடிந்தது. தைவான் பங்குச்சந்தை மட்டுமே உயர்வுடன் முடிந்தது. இஸ்ரேல்-க்கான அமெரிக்காவின் ஆதரவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சர்வதேச பொருளாதாரத்திலும், மத்திய கிழக்கு நாடுகள் மத்தியிலும் ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 247.78 புள்ளிகள் சரிந்து 65,629.24 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 46.40 புள்ளிகள் சரிந்து 19,624.70 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications