முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த நிறுவனம் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ். இந்நிறுவனம் ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். ஜியோ ஃபைனான்சியல் நிறுவனம் விரைவில் கடந்த 2024-25ம் நிதியாண்டின் 4வது காலாண்டுக்கான (2025 ஜனவரி-மார்ச்) நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளது. மேலும் முதல் முறையாக தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் நேற்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், ஒழுங்குமுறை 29 மற்றும் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்துதல் தேவைகள்) விதிமுறைகள், 2015ன் பிற பொருந்தக்கூடிய விதிகளின்படி, நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவின் கூட்டம் 2025 ஏப்ரல் 17ம் தேதியன்று நடைபெற உள்ளது.

2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிறுவனத்தின் தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை பரிசீலித்து அங்கீகரிக்கப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளுக்கு டிவிடெண்ட் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டின் 3வது காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை மாலை 7.30 மணி அளவில் வெளியிட்டது. அது போல் இந்த வாரம் வியாழக்கிழமையன்று அதே நேரத்தில் 4வது காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் (2024 அக்டோபர்-டிசம்பர்) ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 6 சதவீதம் உயர்ந்து ரூ.438 கோடியாக உயர்ந்தது. இது 2023 டிசம்பர் காலாண்டில் ரூ.414 கோடியாக இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் வட்டி வருவாய் 22 சதவீதம் குறைந்து ரூ.210 கோடியாக சரிவடைந்தது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வட்டி வருவாயாக ரூ.270 கோடி ஈட்டியிருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.295 கோடி ஈட்டியது. 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.294 கோடி ஈட்டியிருந்தது. 2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.4,199 கோடியாக உள்ளது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டின் இறுதியில் ரூ.1,206 கோடியாக இருந்தது.
கை நீட்டினால் பேமெண்ட்.. சீனாவின் புதிய தொழில்நுட்பம்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications