முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் துணை நிறுவனம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட். இந்நிறுவனம் டெபாசிட் பெறாத வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் பங்குகளில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் பங்கும் ஒன்றாகும்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் அண்மையில் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட உள்ளதாகவும், பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. அதன்படி, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது கடந்த மார்ச் காலா்ணடு நிதி நிலை முடிவுகளை நேற்று வெளியிட்டது மேலும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்டும் அறிவித்தது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.316 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2 சதவீதம் மட்டுமே அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.311 கோடி ஈட்டியிருந்தது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.493 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.418 கோடி ஈட்டியிருந்தது.
2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.276 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம் அந்த காலாண்டில் நிறுவனத்தின் கட்டணம் மற்றும் கமிஷன்கள் வாயிலான வருமானம் ரூ.39 கோடியாக உயர்ந்துள்ளது. பேமெண்ட் வணிகத்தில், ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து 23.1 லட்சமாக விரிவடைந்துள்ளது.
ஜியோ பேமெண்ட்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் பேமெண்ட் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதற்கான உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.0.50 டிவிடெண்டாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக தேசிய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.6 சதவீதம் உயர்ந்து ரூ.246.20ல் நிறைவடைந்தது.
2024 ஏப்ரல் 23ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய வார உச்சமான ரூ.394.70ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வந்தது. 2025 மார்ச் 3ம் தேதியன்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் பங்கு விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.198.65க்கு சென்றது.
விப்ரோவால் ரூ.600 கோடியை இழந்த அசிம் பிரேம்ஜி.. என்ன காரணம் தெரியுமா?..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications