பங்குச் சந்தையில் ஒரு லாபகரமான முதலீடு என்பது வெறும் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அது சரியான நேரத்தில் சரியான வாய்ப்பை பிடிப்பதும் தான். 2026-ம் ஆண்டின் இக்கட்டான நிதிச் சூழலிலும், பல நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தி, முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்க தயாராக உள்ளன.
சந்தையில் பல நூறு பங்குகள் இருந்தாலும், நீண்ட கால நோக்கில் 10% முதல் 38% வரை வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு, அம்புஜா சிமெண்ட் (Ambuja Cement) மற்றும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் (Apollo Hospitals) போன்ற பங்குகள் ஒரு கோல்டன் டிக்கெட் ஆக பார்க்கப்படுகின்றன. வெறும் யூகங்களை நம்பாமல், தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, உங்கள் போர்ட்ஃபோலியோவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லப்போகும் அந்த 5 பங்குகள் எவை? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

தரகு நிறுவனங்களானது சிமெண்ட், ஹெல்த்கேர். பேங்கிங் மற்றும் நுகர்வோர் மின்சாதன பொருட்கள் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக சுட்டிக் காட்டியுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை மத்தியில், நீண்ட கால அடிப்படையில் அந்த நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் முதலில் பார்க்க இருக்கும் நிறுவனம் அம்புஜா சிமெண்ட். மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனமானது இப்பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இலக்கு விலையை 600 ரூபாயாகவும், அதை சந்தை விலை 451 ரூபாய் என்றும் கூறியுள்ளது. இது சந்தை விலையில் இருந்து 33% அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இத்தரகு நிறுவனமானது ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி பங்கையும் பரிந்துரை செய்துள்ளது. அதன் சந்தை விலை 930 ரூபாயாகும். இலக்கு விலை 1,250 ரூபாயாகும். இது சந்தை விலையில் இருந்து 34% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
சர்வதேச தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் பங்கை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இலக்கு விலையை 875 ரூபாயாகவும், இதன் சந்தை விலை 693 ரூபாயாகவும் உள்ளது. இது சந்தை விலையில் இருந்து 26% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மார்கன் ஸ்டான்லி தரகு நிறுவனமானது எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் பங்கை வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 1726 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. சந்தை விலை 1533 ரூபாயாகும். இது சந்தை விலையில் இருந்து 12% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இத்தரகு நிறுவனம் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் பங்கையும் பரிந்துரை செய்துள்ளது. அதன் இலக்கு விலை 9,209 ரூபாயாகவும், சந்தை விலை 7781 ரூபாயாகவும் உள்ளது. இது சந்தை விலையில் இருந்து 18% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிஎஃப் முதல் என்.எஸ்.சி வரையில்.. சிறந்த 5 சேமிப்பு திட்டங்கள்.. நிரந்தர வருமானம்..!
மேற்கண்ட அனைத்து பங்குகளுமே நிதி ரீதியாக பார்க்கும்போது வலுவான அடிப்படைகளைக் கொண்ட நிறுவனங்களாகும். இருப்பினும் முதலீட்டாளர்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கும் முன்பு சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications