ஒரே ஒரு நாள், சில மணி நேரங்கள், ஆனால் கறைந்து போனதோ 12 லட்சம் கோடி ரூபாய். பங்குச் சந்தை எனும் கடலில் இன்று வீசிய சுனாமி என்னும் பேரழையானது, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் கனவுகளை அடித்து சென்று விட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 1,700 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு பாதாளத்தை நோக்கி சரிய, திரையெங்கும் சிவப்பு நிறம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. வாரத்தில் முதல் நாளில் லாபம் பார்க்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, இன்று கறுப்பு திங்கள் என்றே கூறலாம்.
இது வெறும் திருத்தமா அல்லது ஒரு பெரிய சரிவின் ஆரம்பமா? உங்கள் போர்ட்ஃபோலியோவை தற்காத்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன? ரத்தக் களறியான இன்றைய பங்குச் சந்தை நிலவரத்தின் முழுமையான விவரம் இதோ..

கடந்த வார இறுதியில் சற்று ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தையானது, இன்று காலை முதலே சரிவைக் கண்டு வருகிறது. குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி என இரண்டு குறியீடுகளுமே 2% மேலாக சரிவில் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1700 புள்ளிகள் அல்லது 2.25% சரிந்து, 72,854 புள்ளிகளாகவும், நிஃப்டி 532 புள்ளிகள் அல்லது 2.30% ஆகவும் வீழ்ச்சி கண்டு, 22,582 புள்ளிகளாகவும் காணப்பட்டது. நேற்றைய சந்தை தொடர்பான பதிவில் நிஃப்டி 22,900 - 22,950 புள்ளிகளை உடைத்தாலே, மேற்கொண்டு கடுமையான சரிவை சந்திக்கலாம் என பார்த்தோம். அதேபோல தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்த சரிவானது மேற்கொண்டு தொடரும்பட்சத்தில் 22,000 புள்ளிகளை எட்டவும் வாய்ப்பிருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல் சென்செக்ஸ்-ன் முக்கிய சப்போர்ட் புள்ளியான 74,000 -ஐ உடைத்து கீழாகவே காணப்படுகிறது. ஆக இதுவும் சந்தை இன்னும் செல்லிங் அழுத்தத்தில் இருப்பதையே காட்டுகிறது.
சந்தையில் இன்று ஏற்பட்டுள்ள கடுமையான சரிவு மத்தியில் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பை முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று 429 லட்சம் கோடி ரூபாயாக இருந்த பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மூலதனம், இன்று 417 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. டிரம்ப் ஈரான் மீது மேற்கொண்டு கடுமையான தாக்குதல் நடத்த போவதாக எச்சரித்துள்ளார். பதிலுக்கு ஈரானும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது, இது உலக நாடுகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு 93.89 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் வீழ்ச்சி கண்டு வருகிறது.
ரூபாய் சரிவை தொடர்ந்து அன்னிய முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. சங்கிலித் தொடராக ஆயில் விலை அதிகரிப்பு பணவீக்கத்தை அதிகரிக்கலாம். இது பொருளாதார வளர்ச்சியையும் பதம் பார்க்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தான், சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதுவே இன்று இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த கடும் வீழ்ச்சிக்கும் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த போக்கானது இனி வரும் தினங்களிலும் இருக்கலாம். அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications