எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனம் ஆன்லைன் கற்றல் சேவை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மால் கேப் பங்கான எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் டிவிடெண்டு வழங்குவதால் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.
லாபம்
மும்பை பங்குச் சந்தை தள தரவுகளின்படி, கடந்த 2023-24ம் நிதியாண்டில் எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.327.57 கோடி ஈட்டியுள்ளது. அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.106.44 கோடி ஈட்டியுள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.90.09 கோடியும். நிகர லாபமாக ரூ.28.52 கோடியும் ஈட்டியுள்ளது.

எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜனவரியில் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.33 டிவிடெண்டு வழங்கி இருந்தது. இந்நிலையில், இந்த ஸ்மால் கேப் நிறுவனம் நேற்று தனது காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவிக்கும்போது, பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 500 சதவீதம் டிவிடெண்டும் அறிவித்துள்ளது.
இடைக்கால டிவிடெண்டு
இது தொடர்பாக இந்நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.50 இறுதி டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.33 இடைக்கால டிவிடெண்டுடன் கூடுதலாக வழங்கப்படும்.
டிவிடெண்டு பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதி 2025 ஆகஸ்ட் 13ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இ்ந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்பிஎஸ் லிமிடெட் நிறுவனம் 2024ல் பங்குதாரர்களுக்கு ரூ.45 டிவிடெண்டு வழங்கியது. 2023ம் ஆண்டில் ரூ.30 மற்றும் ரூ.20 என இரண்டு முறை பங்குதாரர்களுக்கு எம்பிஎஸ் லிமிடெட் டிவிடெண்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சந்தை மதிப்பு
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, எம்பிஎஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.77 சதவீதம் குறைந்து ரூ.2,575.60ல் முடிவடைந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.4,406 கோடியாக உள்ளது. 2024 மே 27ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.1,531.55க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 138 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எம்பிஎஸ் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 385 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 973 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுக்கு மேல் நடத்த முடியாது.. உண்மையை போட்டுடைத்த வோடபோன் ஐடியா.. நெருக்கடியில் மத்திய அரசு
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications