பங்குச் சந்தைகளில் நாம் முதலீடு செய்யும் எல்லாம் பங்குகளும் எப்போதும் ஆதாயம் அளிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதேபோல் நாம் சில பங்குகளை சாதாரணமாக கணித்து இருப்போம் அல்லது சில பங்குகள் குறித்து தெரிந்து இருக்காது.

அது போன்ற பங்குகள் மல்டிபேக்கர் பங்கு வருமானத்தை கொடுத்த பிறகு நமக்கு தெரியவரும். அப்படி பெரும்பாலானோருக்கு தெரியாத நிதி துறையை சேர்ந்த வங்கி அல்லாத நிதி நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒராண்டில் 200 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் (NBFC) முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட். இந்நிறுவனம், மின்சார வாகனங்கள், மின்சார சார்ஜிங் உட்கட்டமைப்பு மற்றும் மாற்றக்கூடிய பேட்டரிகள் போன்ற நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது.
முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாக உள்ளது. 2023 ஜூன் காலாண்டில் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் லாபமாக ரூ.3.45 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய மார்ச் காலாண்டில் லாபமாக ரூ.2.66 கோடி ஈட்டியிருந்தது. இந்நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் இன்று வெளியாகிறது.
2023ல் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இப்பங்கின் விலை ரூ.36.55-லிருந்து ரூ.111.76ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டில் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை 200 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை சுமார் 13 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதமும் உயர்ந்தது.
கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.39.80-லிருந்து ரூ.111.75ஆக உயர்ந்து 180 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த ஒராண்டில் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை 200 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை ரூ.3.16லிருந்து ரூ.111.76ஆக உயர்ந்துள்ளது. இந்த கால கட்டத்தில் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை 3,400 சதவீதம உயர்ந்துள்ளது.
கடந்த சில வர்த்தக தினங்களாக முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை அப்பர் சர்க்கியூட்டை தொட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அளவான ரூ.123.15ஐ தொட்டது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது முஃபின் க்ரீன் பைனான்ஸ் லிமிடெட் பங்கு விலை ரூ.117.30ஆக இருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications