வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் பூனவல்லா ஃபின்கார்ப் லிமிடெட். இந்நிறுவனம் தனிநபர் கடன், வணிக கடன் மற்றும் புரோ.பஷனல் கடன் மற்றும் இதர கடன் பிரிவுகளில் தனது சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், தங்க கடன் வணிகத்தை தொடங்க உள்ளதாக பூனவல்லா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பூனவல்லா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், தங்க கடன் வணிகத்தை தொடங்க உள்ளோம். தங்க கடன் வணிகத்தில் இருப்பை அதிகரிக்க, அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 400 புதிய கிளைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

30 நிமிடங்களுக்குள் விரைவான ஒப்புதல்கள்,குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் பல திருப்பி செலுத்தும் விருப்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை விற்காமலேயே அதன் சாத்தியமான நன்மைகளை பெறவும், நீண்ட கால செல்வத்தை பாதுகாக்கும் அதேவேளையில் நிதி நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக வங்கிகள் முதல் வங்கி சாராத கடன் வழங்கும் நிறுவனங்கள் வரை தங்க நகைக் கடன் வழங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றன. ஏனென்றால் தங்க நகைகளை பிணையமாக பெற்றுக் கொண்டுதான் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குகின்றன. 100க்கு 99 சதவீதம் பேர் வட்டியுடன் அசலையும் செலுத்தி நகையை திரும்ப பெற்று விடுவர் இதனால் அவர்களுக்கு கடன் வழங்குபவர்களுக்கு ரிஸ்க் குறைவு.
இதனால் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு தங்க நகை கடன் வழங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், பூனவல்லா ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் வரவு போட்டியே மேலும் தீவிரப்படுத்தும். இதனால் இன்றைய பங்கு வர்த்தகத்தில் மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவார்கள்.
தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தெரிவித்தது. இதனையடுத்து முக்கிய தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களான முத்தூட் பைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் விலை சரிந்தது. தற்போது பூனவல்லா ஃபின்கார்ப் நிறுவனம் தங்க நகை கடன் வணிகத்தில் களம் இறங்குவதால், இந்த பிரிவில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி மிகவும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட், முத்தூட் ஃபைனான்ஸ் மற்றும் ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் பங்குகளின் விலையில் எதிரொலிக்கும் என எதிர்பார்ககப்படுகிறது.
மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் எஃப&ஓவில் தடையில் உள்ளது. கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ், முத்தூட் ஃபைனான்ஸ் பங்குகளை அதன் முந்தைய வாங்கலாம் என்ற மதிப்பீட்டிலிருந்து ADD என்று மதிப்பீட்டை குறைத்துள்ளது மேலும் இப்பங்கின் இலக்கு விலையை ரூ.2,400லிருந்து ரூ.2,250ஆக குறைத்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் முத்தூட் ஃபைனான்ஸ் பங்கு விலை 13 சதவீதம் சரிந்தது. இதே காலத்தில் பூனவல்லா ஃபின்கார்ப் பங்கு விலை 40 சதவீதம் உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலை மேலும் 4 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கை நீட்டினால் பேமெண்ட்.. சீனாவின் புதிய தொழில்நுட்பம்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?



Click it and Unblock the Notifications