நடப்பாண்டில் இந்திய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சில பங்குகள் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளன. அந்த வகையில் நடப்பாண்டில் பாதுகாப்பு துறை சாந்த ரேமண்ட் (Raymond) நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தந்துள்ளது.
ரேமண்ட் நிறுவன பங்கின் விலை நடப்பாண்டின் தொடக்கத்தில் 425.60 ரூபாயிலிருந்து 1,278.80 ரூபாய் என உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டில் மட்டும் சுமார் 200% லாபத்தை வழங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும், ரேமண்ட் பங்கு 8% -க்கும் மேல் உயர்ந்து தேசிய பங்கு சந்தையில் 1,278.80 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது.

அந்த வகையில் இந்த பங்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 200% லாபம் தந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 135%, கடந்த 1 மாதத்தில் 20% என லாபம் தந்திருக்கிறது. ரேமண்ட் லைஃப்ஸ்டைல் மற்றும் ரேமண்ட் ரியாலிட்டி ஆகிய பிரிவுகள் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து, ரேமண்ட் நிறுவனம் ரேமண்ட் ஏரோஸ்பேஸ், டிஃபென்ஸ் & இன்ஜினியரிங் லிமிடெட் என பெயர் மாறியுள்ளது.
மேலும் பாதுகாப்பு துறை உற்பத்திக்கு தேவையான வகையில் பொறியியல் பிரிவில் தன்னை வேகமாக நிறுவனம் வலுப்படுத்தி வருகிறது. இதனால் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் தொடர்ந்து ரேமெண்ட் நிறுவனத்திற்கு ஆர்டர்களை வழங்கி வருகின்றன.
அண்மையில் தான் ஒரு முன்னணி இந்திய பாதுகாப்பு நிறுவனம் ரேமண்ட் நிறுவனத்திற்கு 300-க்கும் மேற்பட்ட வகையான உதிரிபாகங்களை வழங்க ஆண்டுக்கு சுமார் 33 கோடி மதிப்பிலான ஆர்டர் வழங்கியது. மேலும் போர் விமான திட்டத்திற்கான இறக்கை தயாரித்து வழங்கும் டெண்டரும் கிடைத்துள்ளது. தற்போது இதன் ஆர்டர் புத்தகம் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் நிறுவன பங்கு ஏற்றத்துடனே இருப்பதாக சுட்டிக்காட்டும் கேசி செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் மகேஷ் ,ரேமண்ட் பங்கின் டெக்னிக்கல் சார்ட் பாசிடிவான போக்கை காட்டுவதாக கூறியுள்ளார். 1475 ரூபாய் வரை இதன் பங்கு மதிப்பு உயர வாய்ப்புள்ளது என கூறுகிறார். இந்நிறுவன பங்கில் 48% பிரமோட்டர் வசம் உள்ளது, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமார் 7% பங்குகளை வாங்கியுள்ளன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

