டன் கணக்கில் தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா: உலக சந்தையில் தங்கம் விலை இன்னும் குறையுமா?

உலக சந்தையில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித எதிர்பார்ப்பு தான் முக்கிய காரணம் என நாம் நினைக்கிறோம். ஆனால் தங்கம் விலை சரிவிற்கு பிரதான காரணம் ரஷ்யா.

ரஷ்யா ரஷ்யா கடந்த 10 மாதங்களில் சுமார் 72 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. ரஷ்யாவுடன் துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளும் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. இதனால் சந்தையில் டிமாண்டும் குறைந்து சப்ளையும் அதிகமாகி இருப்பதே தங்கம் விலை இப்படி சர்ரென குறைய காரணம் என தெரிய வந்துள்ளது.

டன் கணக்கில் தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா: உலக சந்தையில் தங்கம் விலை இன்னும் குறையுமா?

கோல்ட்ஃபிக்ஸ் (GoldFix) வெளியிட்ட தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான தொடர்ந்து 10 மாதங்களில் ரஷ்யா தனது தங்க இருப்பை குறைத்து, சுமார் 72 டன் தங்கத்தை விற்றுள்ளது. உக்ரைன் போர், பொருளாதார தடைகளால் கடுமையான பொருளாதரா நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது ரஷ்யா.

எனவே ரஷ்ய அரசு தனது நிதி தேவைகளை பூர்த்தி செய்ய தங்கத்தை விற்று பணமாக்குகிறது. நடப்பாண்டில் மட்டும் அதிகமாக தங்கத்தை விற்பனை செய்த நாடாக ரஷ்யா தான் முதலிடத்தில் உள்ளது என உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

Also Read

இந்த ஆண்டு தங்க இருப்பை குறைத்த நாடுகளில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளும் இடம்பிடித்துள்ளன. துருக்கி பொறுத்தவரை எரிசக்தி இறக்குமதி செலவுகள் மற்றும் துருக்கிய லிரா நாணயத்தின் மீதான அழுத்தம் ஆகியவற்றை சரி செய்ய நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் சுமார் 70 டன் தங்கத்தை விற்பனை செய்தது; இவற்றில் பெரும்பாலானவை மார்ச் மாதத்தில் நிகழ்ந்தன.

அஜர்பைஜானின் ஸ்டேட் ஆயில் ஃபண்ட் (State Oil Fund), முதலாம் காலாண்டில் 21.9 டன் தங்கத்தை விற்றது. தங்க விலை உயர்வால், நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டு வரம்பை தாண்டி தங்கத்தின் பங்கு அதிகரித்ததால், போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்தும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.

Recommended For You

செப்டம்பர் வரையிலான தரவுகளின்படி, துருக்கி, ரஷ்யா மற்றும் அஜர்பைஜானின் ஸ்டேட் ஆயில் ஃபண்ட் ஆகியவை இணைந்து சுமார் 166 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளன. உலக சந்தையில் ஏற்கனவே தங்கம் விலை அழுத்தத்தில் உள்ளது. ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் வலுப்பெற்றது ஆகியவை காரணமாக தங்கத்தின் டிமாண்ட் குறைந்தது, அதே வேளையில் சந்தையில் அதிகளவு தங்கமும் குவிந்ததால் தங்கம் விலை இந்த ஆண்டு வேகமாக குறைந்தது.

இனி வரும் மாதங்களிலும் ரஷ்யா போன்ற நாடுகள் அதிகமாக தங்கத்தை விற்பனை செய்வது, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவது , கச்சா எண்ணெய் விலை குறைவது போன்றவை தொடர்ந்தால் தங்கம் விலை இன்னும் சரியும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+