Gold: நாம் கடையில் வாங்கும் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? யார் இதை செய்கிறார்கள்?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி அளவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அறிவிக்கப்படுகின்றன. சில்லறை விற்பனையில் இன்று இது தான் தங்கத்தின் விலை என நிர்ணயம் செய்வது யார்? எந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது? யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இந்தியா தனக்கு தேவையான தங்கத்தின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. எனவே உலக சந்தையில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் இந்திய சந்தையிலும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்று தங்கம் விலை உயருமா, சரியுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணி சர்வதேச தங்கத்தின் விலை.

Gold: நாம் கடையில் வாங்கும் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது? யார் இதை செய்கிறார்கள்?

நியூயார்க்கின் COMEX மற்றும் லண்டன் புல்லியன் மார்க்கெட் போன்ற சர்வதேச சந்தைகளில் தங்கம் வர்த்தகம் செய்யப்படுகிறது. உலக அரசியல் நிகழ்வுகள், பொருளாதார தரவுகள், மத்திய வங்கிகளின் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை ஆகியவற்றால் சர்வதேச தங்கம் விலை மாறுகிறது. இது தமிழ்நாட்டின் தங்கம் விலையிலும் நேரடியாக எதிரொலிக்கின்றன.

அடுத்ததாக சர்வதேச சந்தைகளில் தங்கம் அமெரிக்க டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், டாலர் - ரூபாய் மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் தங்கம் விலையில் தாக்கத்தை தருகின்றன. ரூபாய்க்கு எதிராக டாலர் வலுப்பெற்றால் இந்தியாவில் தங்கம் விலை உயரும், டாலர் பலவீனமடைந்தால் விலை குறையக்கூடும்.

இந்தியா, தங்கத்தை பெரும்பாலும் இறக்குமதி செய்வதால் மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இது தினசரி விலை மாற்றங்களுக்கு வித்திடாது. வரி அறிவிப்பு வரும் அடுத்த சில நாட்களுக்கு இதன் தாக்கம் இருக்கும்.

Also Read

விழாக்காலங்கள், திருமணங்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகமாக இருக்கும். தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகைக் காலங்களில் தேவை அதிகமாக இருக்கும்போது தங்க விலை உயரும் போக்கு காணப்படும். தேவை குறையும்போது விலை குறையும்.

இந்தியாவின் மிகப்பெரிய பண்டக சந்தையான MCX (Multi Commodity Exchange) காலை 9 மணிக்கு வர்த்தகத்தை தொடங்கும். இதில் சர்வதேச தங்க விலை மற்றும் தற்போதைய டாலர் - ரூபாய் மாற்று விகிதத்தின் அடிப்படையில் தங்க வர்த்தகம் நடக்கும். MCX தங்க விலை விகிதங்கள் இந்தியாவில் தங்க விலைக்கான ஒரு பெஞ்ச்மார்க்காக செயல்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் நகை விற்பனையாளர்கள் சங்கங்கள் இருக்கின்றன. இவை காலை கூடி உலக சந்தையில் தங்கம் விலை நிலவரம், எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை நிலவரம், போக்குவரத்து கட்டணம், வரி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளை நிர்ணயம் செய்வார்கள். தமிழ்நாட்டில் காலை 9.30 மணி அளவில் தங்கம், வெள்ளி விலைகள் அப்டேட் ஆகி விடும்.

Recommended For You

தங்கம் இறக்குமதி செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை மாறுபடுவதால் தான் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கம் விலை மாறுபடுகிறது. தங்க நகைகள் மற்றும் நாணயங்களின் சில்லறை விலை, தங்கத்தின் தூய்மை, செய்கூலி, ஜிஎஸ்டி, வரிகள் ஆகியவற்றுக்கு ஏற்ப உள்ளூர் நகை கடைக்காரர்கள் தங்கத்தை நமக்கு விற்பனை செய்கிறார்கள். அதாவது தங்கத்தின் கிராமுக்கான அடிப்படை விலை அனைத்து கடைகளிலும் ஒன்று தான் கூடுதலாக நாம் செலுத்தும் செய்கூலி சேதாரம் தான் ஒவ்வொரு நகை கடைக்கும் தங்கம் விற்பனை விலை வேறுபட காரணம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+