Gold Rate: அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திற்கு பின் தங்கம் விலை என்ன ஆகும்? விலை உயருமா? குறையுமா?

தங்கம் தனது வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து பெருமளவு சரிந்துள்ளது. கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு 40,000 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை இப்படி குறைந்து கொண்டே வருமா அல்லது மீண்டும் உயர தொடங்குமா என்பதை தீர்மானிக்கும் நிகழ்வாக இருக்கிறது அமெரிக்க மத்திய வங்கி கூட்டம்.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் டிசம்பர் மாத கூட்ட முடிவுகளை உலகமே கவனித்து வருகிறது. கடந்த செப்டம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி அக்டோபர் மாத கூட்டத்தில், முந்தைய வட்டி விகித உயர்வுகளின் தாக்கத்தையும் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகளையும் மதிப்பிடுவதற்காக வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்தது. அப்போது பணவீக்கம் மத்திய வங்கியின் இலக்கை விட அதிகமாக இருந்தபோதிலும் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. எனவே டிசம்பர் கூட்டத்தில் ஃபெடரல் ரிசர்வ் குறைந்தபட்சம் 25 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

Gold Rate: அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்திற்கு பின் தங்கம் விலை என்ன ஆகும்? விலை உயருமா? குறையுமா?

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை வட்டி அல்லது வருமானம் தராத சொத்துகளாக உள்ளன. மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் உயரும்போது அமெரிக்க கருவூல பத்திரங்கள் போன்ற வட்டி வருமானம் தரும் சொத்துகளில் நாம் செய்யும் முதலீடுக்கு தங்கத்தை விட அதிக லாபம் கிடைக்கும். இதனால் தான் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி முடிவுகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது டிசம்பர் மாத கூட்டத்திற்கு பின் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டு திசைகளில் செல்ல வாய்ப்புள்ளது. ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினால் அமெரிக்க பத்திரங்கள் அதிக லாபம், தருபவையாக மாறும். எனவே இது டாலருக்கு ஆதரவாக அமையும். முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து வெளியேறி பத்திர முதலீடுகளுக்கு செல்வார்கள். எனவே தங்கம் விலை குறைய தொடங்கும்.

ஒரு வேளை வட்டியை உயர்த்தவும் இல்லை, குறைக்கவும் இல்லை, தற்போதுள்ள அளவிலேயே நீடிக்கும் என அறிவித்தால். தங்கம் விலையில் பெரிய ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வரம்பிலேயே ஏறி இறங்க வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

Also Read

ஃபெடரல் ரிசர்வ் இந்த முறை வட்டியை உயர்த்தாமல் அடுத்து வரும் கூட்டங்களில் வட்டி விகித உயர்வுக்கான சிக்னல்களை தந்தால் தங்கம் விலையில் லேசான சரிவினை எதிர்ப்பார்க்கலாம். ஆனால் ஊக வணிகத்திற்கு வித்திட்டு தங்கம் ஏற்ற இறக்கத்துடனே இருக்க செய்யும் என சொல்லப்படுகிறது.

Recommended For You

தங்கம் விலையில் மற்ற பொருளாதார மற்றும் உலக அரசியல் காரணிகளூம் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து டாலர் வலுவடைந்தால் தங்கம் விலை சரியும். மாறாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தால் தங்கம் விலை அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல் புவி சார் அரசியல் பதற்றங்கள், போர், வர்த்தக மோதல்களும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அமெரிக்க மத்திய வங்கி எடுக்கும் முடிவுகளையும் தாண்டி தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிற காரணிகளும் உள்ளன என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+