தங்கம் விலை: பவுனுக்கு ரூ.50,000 மிச்சம்..!! தங்கம் விலை சரிவில் மறைந்திருக்கும் ஸ்வீட் சர்ப்பிரைஸ்..!!

தங்கம் விலை மாற்றம் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு பெரிய சர்ப்பிரைஸ் தந்துவிட்டது. தங்கமெல்லாம் இனி வாங்க முடியாது என நினைத்த மக்களுக்கு ஜாக்பாட்டாக வந்திருக்கிறது தங்கம் விலை வீழ்ச்சி. தங்கம் விலை சரிவு என்றாலே பெரும்பாலான இந்தியர்கள் தங்க நகை வாங்கவே கடைக்கு செல்வார்கள்.

தங்கம் விலை இந்த ஆண்டு ஜனவரியில் உச்சத்தை தொட்டது. அதுவே இன்றைய தினம் தங்கம் விலை ஆண்டின் குறைந்த பட்ச விலையை எட்டியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 1 பவுன் நகை வாங்கியவர்கள் எவ்வளவு பணம் செலுத்தி இருப்பார்கள், அதுவே இன்று 1 பவுன் நகை வாங்கியவர்கள் எவ்வளவு பணம் சேமித்திருப்பார்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.50,000 மிச்சம்.. தங்கம் விலை சரிவில் மறைந்திருக்கும் ஸ்வீட் சர்ப்பிரைஸ்..

கடந்த ஜனவரி மாதம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒருவர் ஒரு சவரன் (8 கிராம்) தங்க செயினை 12% செய்கூலி, சேதாரம் மற்றும் 3% ஜி.எஸ்.டி வரியுடன் வாங்கியிருந்தால், அவர் செலுத்திய தொகை :

8 கிராம் (1 சவரன்) தங்கத்தின் அடிப்படை விலை: ரூ .16,800 × 8 = ரூ.1,34,400

12% சேதாரம் : ரூ.1,34,400-ல் 12% = ரூ.16,128

சேதாரத்துடன் கூடிய மொத்த மதிப்பு: ரூ.1,34,400 + ரூ.16,128 = ரூ.1,50,528

3% ஜி.எஸ்.டி வரி: ரூ.1,50,528-ல் 3% = ரூ.4,515.84

வாடிக்கையாளர் செலுத்திய இறுதி தொகை: ரூ.1,55,044

Also Read

இன்றைய சந்தை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 11,420 ரூபாய் என விற்கப்படுகிறது. அதே ஒரு சவரன் (8 கிராம்) தங்க செயினை, அதே 12% சேதாரம் மற்றும் 3% ஜி.எஸ்.டி வரியுடன் இன்று வாங்கினால் ஆகும் செலவு:

8 கிராம் (1 சவரன்) தங்கத்தின் அடிப்படை விலை: ரூ .11,420 × 8 =

ரூ. 91,360

12% சேதாரம் : ரூ.91,360-ல் 12% = ரூ.10,963.20

சேதாரத்துடன் கூடிய மொத்த மதிப்பு: ரூ.91,360 + ரூ.10,963.20 = ரூ.1,02,323.20

3% ஜி.எஸ்.டி வரி: ரூ.1,02,323.20-ல் 3% = ரூ.3,069.70

வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய இறுதி தொகை: ரூ.1,05,393

Recommended For You

தங்கத்தின் அடிப்படை விலை கிராமுக்கு 5,380 ரூபாய் குறைந்துள்ளதால், ஒரு சவரனுக்கு அடிப்படை விலையில் மட்டும் 43,040 ரூபாய் குறைந்துள்ளது.தங்கத்தின் அடிப்படை விலையை பொறுத்தே சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி கணக்கிடப்படுவதால், சேதாரத்தில் 5,164.80 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி வரியில் 1,446.14 ரூபாய் மிச்சமாகியுள்ளது.

எனவே ஜனவரி மாதத்தில் 1,55,043 ரூபாய் கொடுத்து வாங்கிய அதே ஒரு சவரன் தங்க செயினை, இன்று 1,05,392.90 ரூபாய்க்கே வாங்க முடியும். அதாவது, ஒரு சவரன் நகை வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக 49,650.94ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+