மாசம் ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? இந்த ஒரு திட்டத்திலேயே ரூ.1 கோடி சேர்க்க முடியும் தெரியுமா?

வேலைக்கு செல்பவர்கள் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் கட்டாயம் தங்களின் ஓய்வுகாலத்திற்காக பணத்தை முதலீடு செய்து வைக்க வேண்டும். பணம் முதலீடு என்றாலே பங்குச்சந்தை முதலீடெல்லாம் எனக்கு செட் ஆகாது என கூறுபவர்கள் உண்டு. ஆனால் பங்குச்சந்தை முதலீடு இல்லாமலேயே அதிக ரிஸ்க் எடுக்காமலேயே உங்களால் எளிதாக 1 கோடி ரூபாயை சேர்க்க முடியும்.

மத்திய அரசின் பிஎஃப் திட்டத்தில் தொடர்ச்சியாக பணம் பங்களிப்பு செய்வதன் மூலமே ஒருவரால் கோடீஸ்வரனாக முடியும் என்கின்றனர் நிபுணர்கள். அது எப்படி சாத்தியம் என்பதை விரிவாக பார்க்கலாம். உங்களின் ஓய்வுகால இலக்கு 1 கோடி ரூபாய் என வைத்து கொள்வோம். உங்களின் தற்போதைய மாதாந்திர அடிப்படை சம்பளம் 25,000 ரூபாயாக இருந்தால் கூட போதும். பிஎஃப் திட்டத்தில் இது சாத்தியப்படும்.

மாசம் ரூ.25,000 சம்பளம் வாங்குறீங்களா? இந்த ஒரு திட்டத்திலேயே ரூ.1 கோடி சேர்க்க முடியும் தெரியுமா?

உதாரணமாக மணி என்பவர், மாதம் தோறும் 25,000 அடிப்படை சம்பளம் தரும் வேலையில் இருக்கிறார். அவரது சம்பளம் ஆண்டுதோறும் 8% உயர்கிறது என வைத்துக்கொண்டால், வருமானத்திற்கு ஏற்ப அவரது பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையும் அதிகரிக்கிறது என வைத்து கொள்வோம்.

அப்படி கணக்கிட்டால் தொடக்கத்தில் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாயாக உள்ளது. ஆண்டுக்கு 8% என இது உயர்ந்தால் 10 ஆண்டுக்கு பின் அவரது அடிப்படை சம்பளம் 53,973 ரூபாய், அதுவே 25 ஆண்டுகளுக்கு பின் அவரது அடிப்படை சம்பளம் 1,71,000 ரூபாய். சம்பளம் உயரும்போது பிஎஃப் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும்.

Also Read

அப்படி பார்த்தால் ஆண்டுதோறும் பிஎஃப் பங்களிப்பை 8% மற்றும் ஆண்டு வட்டி 8.25% என நீடிக்கும் பட்சத்தில் 30 ஆண்டுகளில் மணியின் பிஎஃப் கணக்கில் 1.13 கோடி ரூபாய் இருக்கும். அதாவது 30 ஆண்டுகள் இவர் தவ்றாமல் வேலை செய்து சம்பள உயர்வுக்கு ஏற்ப பிஎஃப் பங்களிப்பை உயர்த்த வேண்டும். அப்படி இருந்தால் எந்த ஒரு ரிஸ்க்கான முதலீடும் இல்லாமல் பிஎஃப் முதலீட்டிலேயே இவரால் 1 கோடி இலக்கை தொட முடியும்.

Recommended For You

பிஎஃப் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் நம் சம்பளத்திலிருந்தே நேரடியாக பணம் பிடித்தம் செய்யப்படுவதால், ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தனியாக முதலீட்டு முடிவுகளை எடுக்கவோ அல்லது தினசரி சந்தை ஏற்ற இறக்கங்களை கண்காணிக்கவோ தேவையில்லை. மாதந்தோறும் சம்பளத்தில் ஒரு தொகையும் நிறுவனம் சார்பில் நம் கணகில் போடப்படும் பிஎஃப் பணமும் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடையும்.

அதாவது பிஎஃப் கணக்கில் உள்ள பணத்திற்கு அரசு கொடுக்கும் வட்டி ஏற்கனவே உள்ள சேமிப்புடன் சேர்க்கப்படும் அடுத்த முறை புதிய தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இந்த காம்பவுண்டிங் மேஜிக் தான் பிஎஃப் தொகையை வளர செய்கிறது. தொடக்கத்தில் சேமிப்பு மெதுவாக தெரிந்தாலும், நீண்ட கால நோக்கில் குறைந்த பணமே பெரும் செல்வத்தை தேடி தரும் என்கின்றனர் நிபுணர்கள்.

முடிந்த வரை பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவே கூடாது என கூறும் நிபுணர்கள், ஓய்வுகால தேவைக்காக சேமிக்கப்படும் பிஎஃப் பணய்த்தை முழுக்க முழுக்க அந்த நோக்கத்திற்காக மட்டுமே பார்க்க வேண்டும் என யோசனை கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+