தங்கம் இனி விலையேற்றம் தான்..!! வந்தது சிக்னல்..!! போட்டி போட்டு தங்கத்தை வாங்கும் நிறுவனங்கள்..!!

உலக அளவிலும் இந்திய அளவிலும் கடந்த அக்டோபர் தொடங்கி கடந்த வாரம் வரை தங்கம் விலை சரசரவென வீழ்ச்சி அடைந்தது. தங்கத்தின் இந்த விலை சரிவு மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய நிம்மதியை தந்தது. பலரும் கடைகளுக்கு சென்று தங்க நகைகளை வாங்கியதை காண முடிந்தது. அதுவும் திருமண சீசன் என்பதால் தங்க நகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தங்கம் விலை குறைந்ததால் கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியில் தங்களது முதலீட்டு அளவை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறைத்து வந்தன. அதாவது தங்கத்தில் செய்த முதலீடுகளை எடுத்தன, மேலும் வழக்கம் போல அதிக தொகையை முதலீடு செய்வதை தவிர்த்து வந்தன. ஆனால் திடீரென மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளன.

தங்கம் இனி விலையேற்றம் தான்..!! வந்தது சிக்னல்..!! போட்டி போட்டு தங்கத்தை வாங்கும் நிறுவனங்கள்..!!

அமெரிக்க வட்டி விகிதங்கள் குறித்த எதிர்பார்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. எனவே மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் தங்களது மல்டி-அசெட் ஃபண்டுகளில் (Multi-asset funds) தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளன.

குறிப்பாக, ஆக்சிஸ் , டிஎஸ்பி மற்றும் எஸ்பிஐ ஆகிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்கம் மற்றும் வெள்ளி மீது மீண்டும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி உச்சத்தை தொட்ட எம்சிஎக்ஸ் ஸ்பாட் தங்கம், நவம்பர் 20-ஆம் தேதி 40%க்கும் மேல் சரிந்தது. 24 கேரட் தங்கம் 10 கிராம் விலை 1,23,805 ரூபாய் என்ற அளவிற்கு சென்றது, வெள்ளி விலை 59% சரிந்து, ஒரு கிலோ 1,52,674 ரூபாயானது.

Also Read

இதற்கு மேல் தங்கம், வெள்ளி விலைகள் குறையாமல் மீண்டும் எழ தொடங்கியுள்ளன. எனவே மியுச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் மீண்டும் தங்கம் , வெள்ளி வாங்க தொடங்கியுள்ளன. அப்படி என்றால் இனி தங்கம் விலை ஏறுமுகமாக தான் இருக்க போகிறது என்ற சிக்னல் வந்துவிட்டதாகவே அர்த்தம்.

Recommended For You

இது குறித்து எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு பிரிவு தலைவர் தினேஷ் பாலச்சந்திரன் மிண்ட் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிக் "மூன்று வாரங்களுக்கு முன்பு வரை, அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைந்தது இரண்டு முறையாவது வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் காரணமாக, ஃபெடரல் வங்கி இன்னும் ஒரு முறை மட்டும் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டு, பணவீக்கத்தை விட பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக கூறுகிறார். இதனால் தான் தங்கம் விலை உயர்கிறது என்கிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+