தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வந்தது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் கொண்டாட்டம் அடைந்தனர். ஆனால் இன்று தங்கம் விலை உயர தொடங்கிவிட்டது. இன்றைய தினம் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 135 ரூபாய் உயர்ந்து, 11,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,080 ரூபாய் விலை கூடி 92,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இரண்டு வாரங்களாக தங்கம் விலை சர்ரென குறைந்தது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 1,745 ரூபாயும் ஒரு சவரனுக்கு 13,960 ரூபாயும் விலை சரிந்தது. 10 கிராமுக்கு 17,450 ரூபாய் விலை குறைந்தது. இது வரலாற்றிலேயே இல்லாத விலை வீழ்ச்சி. ஆனால் விலை மீட்சி அடைந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பியுள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே தமிழ்நாட்டிலும் தங்கம் விலை இன்று உயர காரணமாகும்.
24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 12,656 ரூபாய்க்கும் 10 கிராம் 1,26,560 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 9,490 ரூபாய்க்கும் ஒரு சவரன் 75,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே வீக் எண்டில் தங்கம் வாங்கியவர்கள் தப்பித்தனர். இன்னும் தங்கம் விலை குறையட்டும் நகை வாங்கி கொள்ளலாம் என காத்திருந்தவர்கள் மாட்டி கொண்டனர்.
வெள்ளியின் விலை இன்று மாற்றமில்லாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை 1.75 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை உயர்ந்த போதும் தமிழ்நாட்டில் சில்லறை விற்பனையில் விலை உயரவில்லை.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் திடீரென ஏற்றம் அடைய தொடங்கியுள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த கூடும் என்ற எதிர்பார்ப்பு சற்றே குறைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். எனவே உலக சந்தையில் ஒரே நாளில் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 92 டாலர்கள் உயர்ந்து 3,607 டாலர்களாக உள்ளது. தங்கம் விலை அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை சற்றே ஏறுவது இறங்குவதுமாக தான் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

