நிக்கி பிஎம்ஐ தரவுகள் நாட்டின் உற்பத்தித் துறை 4வது மாதமாகத் தொடர்ந்து ஜூன் மாதத்திலும் சரிவை சந்தித்துள்ளது, புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை குறைத்துள்ளது என எச்சரிக்கும் நிலைக்கு நேர் எதிராக, இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
பிஎம்ஐ எதிரொலிகள் அனைத்தும் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது நாட்டின் உற்பத்தி துறைக்கு எச்சரிக்கை என்பதை நாம் மறக்கக் கூடாது.
மேலும் இன்றைய உயர்வுக்கு ஜிஎஸ்டியும் அதன் எதிரொலிகளும் ஒரு காரணமாக இருந்தாலும், அதனைத் தாண்டி பல முக்கியக் காரணங்கள் உள்ளது.
ஜூலை மாத ஆர்டர்கள்
ஜூன் மாதத்திற்கான ஆர்டர்கள் கடந்த வார வியாழக்கிழமை முடிந்த நிலையில், ஜூலை மாத ஆர்டர்களின் இன்று அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில வாரங்களாகப் பல ஏற்ற இறக்கங்களில் சரிவை கண்ட பங்குச்சந்தை இன்று நிலையான வர்த்தகத்துடன் 300 புள்ளிகள் வரை உயர்ந்து மீண்டும் 31,000 புள்ளிகளை அடைந்தது.
ஐடிசி பங்குகள்
ஜிஎஸ்டி அமலாக்கம் இந்திய நுகர்வோர் சந்தைக்கு மிகப்பெரிய வாய்ப்பு, இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரை அனைவரும் எப்எம்ஜிசி துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவில் முதலீடு செய்தனர்.
இதன் எதிரொலியாக இத்துறையின் மிகப்பெரிய நிறுவனமான ஜிடிசி நிறுவன பங்குகள் இன்று 5.70 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகம் முடிவடைந்தது.
ஆட்டோ சேல்ஸ்
ஜூன் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை அதிகளவில் குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று இந்திய சந்தையில் குவிந்த அதிகப்படியான முதலீட்டில் இத்துறை நிறுவனங்களும் வளர்ச்சி அடைந்துள்ளது.
எப்ஐஐ முதலீடு
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் நாட்டின் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என்ற நோக்கில் இன்று அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்தனர்.
ஆசிய சந்தை
திங்கட்கிழமையின் நிலையான வர்த்தகத்திற்கு முக்கியப் பலமாக இருந்தது ஆசிய சந்தை. இன்று ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து பெறும் அளவிலான முதலீடு இந்திய சந்தையில் குவிந்துள்ளது.
முதல் நாள்
நாட்டின் மறைமுக வரி விதிப்பை முழுமையாக மாற்றிய ஜிஎஸ்டி இன்று அமலாக்கம் செய்யப்பட்டு இன்று முதல் நாள் வர்த்தகம் என்பதால், இன்று இந்திய சந்தைக்கு இருந்த பாதகமான காரணங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் எதிரொலியில் மறைந்தது.
2வது நாளில் அமர்க்களம்
ஒரு பார்வை
பெரிய தலை
ஜியோவின் ஜிஎஸ்டி சேவை


Click it and Unblock the Notifications