ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இந்த செய்தி இன்று காலை இந்திய பங்குச் சந்தையில் ஒரு பெரும் நிலநடுக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை 30% உயர்ந்த ஒரே நாளில், இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் கரைந்து போயுள்ளது. இதனிடையே ரிலையன்ஸ் (Reliance), பிபிசிஎல் (BPCL) முதல் ஜேகே டயர்ஸ் (JK Tyre) வரை பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களை கதிகலங்க வைத்துள்ளன.

சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு என சில காரணிகள் எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது? இதற்கு காரணமான அந்த ஆயில் ஷாக் பின்னணியையும், இதனால் எந்தெந்த துறைகள் இன்னும் சிக்கலில் இருக்கின்றன என்பதையும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

இன்று (மார்ச் 9, 2026), ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் மத்தியில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை சுமார் 30% உயர்ந்துள்ளது. இது 2020-ம் ஆண்டுக்கு பிறகு காணப்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் எண்ணெய் போக்குவரத்தை கட்டுப்படுத்தியதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த சர்வதேச நெருக்கடியால், இந்திய பங்குச் சந்தையானது நிலை குலைந்தது போயுள்ளது. சென்செக்ஸ் 2,494 புள்ளிகள் (3.16%) சரிந்து 76,424 புள்ளிகளிலும், நிஃப்டி 752 புள்ளிகள் (3.07%) சரிந்து 23,697 புள்ளிகளிலும் முடிவடைந்துள்ளன.
OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!
கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாக பல நிறுவனங்களின் லாபத்தை பாதித்துள்ளது. குறிப்பாக விமானம் மற்றும் போக்குவரத்து துறையானது கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்ற நிலையே காணப்படுகிறது. இதன் காரணமாக இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவு அதிகரிக்கும். இந்த சூழலில் தான் அவற்றின் பங்குகள் விலை 3.7% வரை சரிந்துள்ளது. கச்சா எண்ணெயை முக்கிய மூலப் பொருளாக கொண்ட பெயிண்ட் மற்றும் கெமிக்கல் நிறுவனங்களும் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் கடும் சரிவை கண்டுள்ளன.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான (OMCs) பிபிசிஎல், ஐஓசி மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்கள் 3% முதல் 6% வரை சரிவை சந்தித்துள்ளன. இது அதிகரித்துள்ள இறக்குமதி செலவுகள் காரணமாக லாபத்தில் பாதிப்பு இருக்கும் என்ற நிலையில் சரிவை கண்டு வருகின்றன.
SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?
மேற்கண்ட துறைகளோடு எல்&டி, அதானி போர்ட்ஸ், ஆட்டோ மற்றும் எஃப்எம்சிஜி, நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி ரியால்டி துறைகளும் இந்த விலை உயர்வின் தாக்கத்தால் சரிவை சந்தித்துள்ளன. நிபுணர்கள் இது ஒரு தற்காலிக சரிவு தான். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் நீண்ட கால வளர்ச்சி இன்னும் மாறவில்லை. எனவே பங்குகள் மேலும் 4-5% சரிந்தால், அதை நல்ல நிறுவனங்களை நீண்ட கால முதலீட்டிற்கான் ஒரு வாய்ப்பாக பார்க்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+