SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

இந்திய பங்குச் சந்தையில் எப்போதுமே முதலீட்டாளர்களின் பேவரைட் பட்டியலில் பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு (PSU Banks) என ஒரு தனி இடம் உண்டு. ஆனால் சமீப காலமாக எஸ்பிஐ முதல் பேங்க் ஆப் பரோடா வரை முன்னணி வங்கிப் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்து வருகின்றன.

லாபத்தில் இருக்கும் இந்த வங்கிகள், திடீரென ஏன் முதலீட்டாளர்களை இப்படி பதற வைக்கின்றன? கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய போர் பதற்றம் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த அச்சம் என இந்த வீழ்ச்சிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் காரணங்கள் என்னென்ன? சந்தையை அதிர வைத்த இந்த வங்கித் துறையின் வீழ்ச்சிக்குரிய முக்கிய காரணங்கள் என்ன? இப்பங்குகளை வாங்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரும்பாலான துறை சார்ந்த பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக இந்திய பொதுத்துறை வங்கிப் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக நிஃப்டி PSU வங்கி குறியீடானது 6% அதிகமான சரிவைக் கண்டுள்ளது. இதே பேங்க் நிஃப்டியும் 4% அதிகமான சரிவைக் கண்டுள்ளது. இந்த சரிவினிடையே நிஃப்டி 50 குறியீடும் 3% மேலாக சரிவைக் கண்டுள்ளது.

வங்கிப் பங்குகளான எஸ்பிஐ, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பங்குகள் 4% முதல் 6% வரையில் வீழ்ச்சி கண்டுள்ளன. இதே தனியார் துறையை சேர்ந்த முன்னணி பங்குகளான ஹெச்.டி,.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பங்குகளும் 5% சரிவைக் கண்டுள்ளன. முந்தைய வர்த்தக தினத்திலேயே PSU வங்கி குறியீடானது 2% சரிவைக் கண்ட நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடானது 11% மேல் சரிவைக் கண்டுள்ளது.

நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது பேங்க் நிஃப்டி குறியீடானது இதுவரையில் 8% சரிவைக் கண்டுள்ளது. தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குகள், மார்ச் மாதத்தில் சரிவை காணத் தொடங்கியுள்ளது.
OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!
பொதுத்துறை வங்கி பங்குகளின் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், பத்திரங்களின் ஏற்றம் பார்க்கப்படுகிறது. இது ஈரான் - இஸ்ரேல் இடையிலான பிரச்சனை மத்தியில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கும் வங்கி பங்குகள் சரிவுக்கும் என்ன காரணம் என பலருக்கும் கேள்வி எழலாம்.

பொதுத்துறை வங்கிகள் தங்கள் சொத்துக்களில் பெரும் பகுதியை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. தற்போது நடக்கும் அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை 110 டாலரை கடந்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் சங்கிலித் தொடர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்து நாட்டில் பணவீக்கம் உயரும். இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.
பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!
வட்டி விகிதங்கள் உயர்ந்தால், சந்தையில் உள்ள பத்திரங்களின் வருவாய் அதிகரிக்கும் கணித ரீதியாக பார்க்கும்போது வட்டி விகிதமும், பத்திர விலையும் எதிர்மாறானவை. இது வங்கியை பாதிக்கலாம். இன்னும் தெளிவாக கூறினால், வங்கிகள் தங்களிடம் இருக்கும் உபரி பணத்தை சும்மா வைத்திருக்காமல், அரசு வெளியிடும் பத்திரங்கள் (Bond) எனப்படும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வைத்திருக்கும். ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால், புதிய பத்திரங்களின் வட்டி வருமானம் அதிகமாக இருக்கும். ஆனால் அப்போது, பழைய பத்திரங்களின் மதிப்பு குறைந்துவிடும்.

உதாரணத்திற்கு வங்கி ஒரு பத்திரத்தை 100 ரூபாய்க்கு வாங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் வட்டி வருமானம் 6% ஆக இருக்கிறது. இப்போது சந்தையில் வட்டி விகிதம் உயர்கிறது. உதாரணத்திற்கு 8% ஆக உயர்த்தப்படுகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது புதிய பத்திரங்கள் 8% வட்டி தருகின்றன. ஆனால் வங்கியிடம் இருக்கும் பழைய 6% பத்திரங்களை யாராவது 100 ரூபாய்க்கு வாங்குவார்களா? மாட்டார்கள். எனவே அந்த பத்திரத்தின் சந்தை மதிப்பு 95 ரூபாய் அல்லது 90 ரூபாய் என சரியலாம். ஒரு வேளை வங்கி அந்த பத்திரத்தை விற்காவிட்டாலும் கூட, அதன் மதிப்பு 100-லிருந்து 90 ரூபாயாக ஆக குறைந்துவிட்டது. இதைத்தான் Mark-to-Market (MTM) இழப்பு என்பார்கள். இது வங்கிக்கு இழப்பு தான்.
பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்
அதோடு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது சந்தையின் தொடர் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமையலாம். ஆக தற்போதைக்கு முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்தும் வெளியேறி வரலாம். இதுவும் சரிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். தற்போதைக்கு முதலீட்டாளர்கள் காத்திருந்து முதலீடு செய்வதே உத்தமம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+