பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

பங்குச் சந்தை என்பது வெறும் எண்களின் விளையாட்டு மட்டுமல்ல, அது எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு திரில்லர் திரைப்படம் போன்றது. சில நேரங்களில் காளைகளின் ஆதிக்கம் விண்ணைத் தொடும், சில நேரங்களில் கணிக்க முடியாத கரடிகளின் நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த சந்தையையும் தரைமட்டமாக்கி விடலாம்.

அப்படி கடந்த பத்தாண்டுகளில், இந்திய முதலீட்டாளர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்த தருணங்கள் பல உண்டு. கண்ணிமைக்கும் நேரத்தில் பல லட்சம் கோடி ரூபாய் செல்வம் கரைந்து போன அந்த கறுப்பு தினங்கள் என்னென்ன? அதற்கு என்ன காரணம்? கண்ணுக்கே தென்படாமல் உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா முதல், கார்ப்பரேட் உலகையே அதிரவைத்த அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் வரை.. இந்திய பங்குச் சந்தையின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்த்த அந்த 5 மிகப்பெரிய சரிவுகளின் பின்னணியை பார்ப்போமா?

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

பங்குச் சந்தையை பொறுத்த வரையில் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போலத் தான். ஏற்றம் என்பது இருந்தால், நிச்சயம் சரிவும் இருக்கும். இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகால வரலாற்றை திரும்பி பார்த்தால், அவை முதலீட்டாளர்களுக்கு பல்வேறு பாடங்களை புகட்டியுள்ளன. கடுமையான சரிவின் மத்தியிலும் லாபத்தையும் வாரி வழங்கியுள்ளன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் 195% அதிகமான லாபத்தையும், நிஃப்டி 50 சுமார் 68% லாபத்தையும் பதிவு செய்துள்ளன.

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!
சந்தையை உலுக்கிய முக்கிய 5 நிகழ்வுகள்:
பணமதிப்பிழப்பு நடவடிக்கை : கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு மத்திய அரசு பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு அடுத்த நாள் காலையிலேயே பங்குச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்செக்ஸ் ஒரே நாளில் 1,689 புள்ளிகள் (6.12%) சரிந்து 26,902 நிலைக்கு வந்தது. நிஃப்டி 50 குறியீடானது 541 புள்ளிகள் (6.33%) சரிந்து 8,002 புள்ளிகளாக வீழ்ந்தது.
இதற்கு உள்நாட்டில் பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய பதற்றம் ஒருபுறம் இருக்க, அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்த நிச்சயமற்ற நிலையும் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கோவிட்-19 பெருந்தொற்று (மார்ச் 2020): கடந்த ஒரு தசாப்தத்தில் மிக மோசமான மற்றும் உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்திய சரிவு இதுவாகும். கொரோனா எதிரொலியாக கடந்த மார்ச் 23, 2020 அன்று, இந்திய பங்குச் சந்தை அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியை கண்டது. சென்செக்ஸ் 3,935 புள்ளிகள் (13.15%) மற்றும் நிஃப்டி 1,135 புள்ளிகள் (12.98%) சரிந்தன.
கடந்த 2020 ஜனவரி மாத உச்சத்திலிருந்து மார்ச் மாத இறுதிக்குள் சந்தை தனது மதிப்பில் கிட்டத்தட்ட 38% இழப்பை சந்தித்தது. இது கொரோனா காரணமாக நாடு தழுவிய லாக்டவுன் மற்றும் உலகப் பொருளாதார முடக்கம் குறித்த பயத்தினால் முதலீட்டாளர்கள், பங்குகளை கண்மூடித்தனமாக விற்றதே இதற்கு பிரதான காரணமாகவும் இருந்தது.
மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் (ஜனவரி - பிப்ரவரி 2023): கொரோனா பெருந்தொற்று காலத்தை போல, அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் ஒட்டுமொத்த சந்தையையும் முடக்கவில்லை. ஆனால் இந்திய கார்ப்பரேட் உலகில் ஒரு பெரும் அதிர்வலையை உருவாக்கியது. குறிப்பாக அந்த காலகட்டத்தில் அதானி குழும பங்குகள் அனைத்தும் தரை தட்டின. அந்த சமயத்தில் அக்குழுமத்தின் நிறுவனங்கள் சில வாரங்களிலேயே 100 பில்லியன் டாலர் (சுமார் ₹8.2 லட்சம் கோடி) அளவில் சந்தை மதிப்பை இழந்தன.
அதானி குழுமத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் காரணமாக, வங்கிகள் அதானி குழுமத்துக்கு வழங்கிய கடன்கள் குறித்த கவலை எழுந்தது. இதனால் வங்கிப் பங்குகள் மற்றும் நிஃப்டி 50 குறியீட்டில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. மொத்தத்தில் அந்த சமயத்தில் சந்தையே ஒரு ஆட்டம் கண்டது. அந்த சமயத்தில் சரிவை கண்ட அதானி பங்குகள் சில, தற்போது வரையில் அதன் முந்தைய உச்சங்களை எட்டவில்லை.

பொதுத் தேர்தல் முடிவு நாள் 2024:
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு சார்பாக இருந்ததால் சந்தை உச்சத்தில் இருந்தது. ஆனால், ஜூன் 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் எதிர்பாராத விதமாக அமைந்ததால் சந்தையானது கடும் சரிவை கண்டது. குறிப்பாக சென்செக்ஸ் 5.74% மற்றும் நிஃப்டி 5.93% ஒரே நாளில் சரிந்தன. இது கொரோனா காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான ஒருநாள் வீழ்ச்சியாகும். அந்த காலகட்டத்தில் சில மணி நேரங்களிலேயே முதலீட்டாளர்களின் சுமார் 31 லட்சம் கோடி ரூபாய் முதலீடானது கரைந்து போனது.

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் (மார்ச் 9, 2026): பல்வேறு சவால்களை சந்தித்து வரும் இந்திய சந்தைக்கு பதற்றம் என்பது புதிதல்ல. இருப்பினும் தற்போது நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது. சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இன்று (மார்ச் 9, 2026) சென்செக்ஸ் சுமார் 2,500 புள்ளிகள் (3%) சரிந்து 76,424 என்ற நிலையை எட்டியுள்ளது. நிஃப்டி 750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,697 நிலைக்கும் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 டாலரை கடந்ததால், உற்பத்திச் செலவு அதிகரிக்கும் என்ற அச்சத்தில் பெயிண்ட் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் (OMCs) பங்குகள் கடும் விற்பனைக்கு உள்ளாகின. இந்த நிலையில் தான் முக்கிய குறியீடுகளும் அதல பாதாளத்தை எட்டியுள்ளன.

மொத்தத்தில் மேற்கண்ட 5 நிகழ்வுகளும் இந்திய முதலீட்டாளர்களின் மறக்க முடியாத கருப்பு தினங்கள் எனலாம். எனினும் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம், ஒவ்வொரு சரிவிலும் சந்தையானது பல வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளது. அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால் லாபம் தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+