இந்தியர்கள் அதிகளவில் ரஷ்யாவில் வசித்து வருகின்றனர். கல்வி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக நம்மவர்கள் ரஷ்யாவுக்கு செல்கின்றனர். இந்தியர்கள் ரஷ்யாவில் அந்நாட்டு வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இந்தியர்கள் ரஷ்யாவில் வங்கி கணக்கு தொடங்குவதற்கான விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக இருந்தது. இதுவரை இந்தியர்கள் ரஷ்யாவில் உள்ள வங்கிகளுக்கு நேரடியாக சென்று மட்டுமே வங்கி கணக்கை தொடங்க முடியும்.
ஆனால் தற்போது தங்கள் நாட்டில் இந்தியர்கள் வங்கி கணக்கை தொடங்குவதற்கான விதிமுறைகளை ரஷ்யா எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம், ரஷ்ய வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்க விரும்பும் இந்தியர்கள் நம் நாட்டில் இருந்தபடியே ரஷ்ய வங்கிகளில் வங்கி கணக்கை தொடங்க முடியும். ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் சமூக ஊடகமான எக்ஸில், ரஷ்யாவின் நிதி நிறுவனங்களில் வங்கி கணக்குகளை திறக்க விரும்பும் இந்தியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் ரஷ்ய அரசாங்கத்தின் முடிவை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இனி தொலைவில் இருந்து ரஷ்ய வங்கிகளில் கணக்கை திறக்கவோ அல்லது பணத்தை டெபாசிட் செய்யவோ முடியும்.
ரஷ்ய வங்கிகளில் கணக்கை திறக்க விரும்பும் இந்தியர்கள் வழிகாட்டுதலுக்காக ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வங்கிகளை அணுக வேண்டும். ரஷ்யாவிற்கு வந்ததும், கூட்டாளியான ரஷ்ய வங்கியில் வங்கி அட்டையை விரைவாக பெறுவது மற்றும் நிதி பரிவர்த்தனைகளை தொடங்கலாம். இந்த அம்சம் இந்தியா சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு வசதியானது என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications