மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை துவங்கிய போதே உயர்வுடன் துவங்கிய முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீட்டிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 49,733.84 புள்ளிகளை அடைந்த நிலையில், இன்று காலை துவங்கும் போது கிட்டதட்ட 350 புள்ளிகள் உயர்வு 50,093 புள்ளிகளில் வர்த்தகத்தைத் துவங்கியது.
இதன் பின்பும் தொடர்ந்து வளர்ச்சியின் மூலம் சென்செக்ஸ் 50,375.77 புள்ளிகளை எட்டி காலை வர்த்தகத்தில் உயர்வை எட்டியது.
முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் உச்ச அளவை அடைந்த அடுத்த சில நிமிடத்தில் முதலீட்டாளர்கள் பங்குகள் லாப நோக்கத்திற்காக அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தாலும், பியூச்சர் ஆர்டர்கள் இன்று முடிவடையும் காரணத்தாலும் மளமளவெனச் சரிய துவங்கியது.
தடாலடி சரிவில்
இந்தத் தடாலடி சரிவில் நேற்றைய அளவீட்டை விடவும் சுமார் 200 புள்ளிகள் வரையில் சரிந்தது. ஆக மொத்தம் நேற்றைய வர்த்தக அளவிலிருந்து வர்த்தகம் துவங்கி சில மணிநேரத்தில் 640 புள்ளிகள் வரையில் உயர்ந்து 800 புள்ளிகள் வரை சரிந்து 49,535.98 புள்ளிகளை அடைந்தது.
வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள்
இன்று காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் வங்கி மற்றும் ஆட்டோமொபைல் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் இத்துறை பங்குகள் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் 11.20 மணி அளவில் சென்செக்ஸ் குறியீடு சரிவில் இருந்து மீண்டு 65 புள்ளிகள் உயர்வில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி குறியீடு
இன்றைய வர்த்தகத்தில் நிப்டி குறியீடு 15,044.35 புள்ளிகள் வரையில் உயர்ந்து 14,814.45 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது. மேலும் 11.20 மணிநேரத்தில் 14,873 புள்ளிகளில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்
இதே வேளையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்து அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் தனது நாணய கொள்கையை வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பின்பு அந்நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதால் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பழைய நிலையிலேயே வைக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications