இந்திய பங்கு சந்தையானது கடந்த சில அமர்வுகளாகவே கடும் சரிவினைக் கண்டு வந்த நிலையில் இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 261.21 புள்ளிகள் அல்லது 0.45% அதிகரித்து, 58,161.40 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 244.20 புள்ளிகள் அல்லது 1.43% அதிகரித்து, 17,287.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 21 பைசா அதிகரித்து, 82.28 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 82.49 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
இன்றைய தொடக்கம்?
இன்று சந்தையில் தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 565.24 புள்ளிகள் அல்லது 0.98% அதிகரித்து, 58,465.43 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 164.70 புள்ளிகள் அல்லது 0.97% அதிகரித்து, 17,208 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1450 பங்குகள் ஏற்றத்திலும், 389 பங்குகள் சரிவிலும், 85 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள லார்சன், யுபிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், ஹெச்.யு.எல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஓ.என்.ஜி.சி, நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், பார்தி ஏர்டெல், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இன்றைய வர்த்தக அமர்வில் அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.
சரிவுக்கு முற்றுப்புள்ளி
தொடர்ந்து கடந்த 4 அமர்வுகளாகவே சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
குறிப்பாக சிலிக்கான் வேலி பங்குகள் சரிவால் ஐடி பங்குகள் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளன.
தற்போது என்ன நிலவரம்?
தற்போது 10.34 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 278.97 புள்ளிகள் அல்லது 0.48% அதிகரித்து, 58,179.16 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 87.9 புள்ளிகள் அல்லது 0.52% அதிகரித்து, 17,131 புள்ளிகளாகவும் காணப்படுககிறது.


Click it and Unblock the Notifications