ஜிஎஸ்டி வரி: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்! என்னென்ன பங்குகளை வாங்கினால் லாபம்?

மத்திய அரசு இந்தியாவில் பெரிய அளவிலான ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது . வரும் செப்டம்பர் வரும் 22 ஆம் தேதி முதலே இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது .

பங்குச்சந்தை: ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்தின் மூலம் இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலை பெருமளவில் குறைய போகிறது. இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் பெரிய அளவில் மக்களிடையே நுகர்வு போக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இது இந்தியா பங்குச்சந்தையிலும் வலுவாக எதிரொலித்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரி: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்! என்னென்ன பங்குகளை வாங்கினால் லாபம்?

உயர்ந்த பங்குச்சந்தை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்வு கண்டது. காலை 9.30 மணி அளவில் கிட்டத்தட்ட 81,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது. அதேபோல நிஃப்டி 184 புள்ளிகள் அதாவது 0.74 சதவீதம் உயர்வு கண்டு 24,899 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி ஆட்டோ, எப்எம்சிஜி ஆகிய இரண்டு துறைகளும் 2 சதவீதம் வரை உயர்வு கண்டன. நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் 320 புள்ளிகள் உயர்வு கண்டு வர்த்தகமானது.

ஐடிசி: ஜிஎஸ்டி கவுன்சிலின் அறிவிப்பை எஃப்எம்சிஜி மற்றும் சிகரெட் விற்பனையில் ஈடுபடும் ஐடிசி நிறுவனத்தின் பங்கு கிட்டத்தட்ட ஒரே நாளில் 4 சதவீதம் வரை உயர்வு கண்டுள்ளது. இன்றைய நாளில் ஐடிசி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 427 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதே போல விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், காட்ஃபிரே பிலிப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளது.

ஐடிசி பங்கு வாங்கலாமா?: மத்திய அரசு சிகரெட் போன்ற புகையிலை சார்ந்த பொருட்கள் பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்திருக்கும் சூழலில் ஐடிசி நிறுவன பங்கினை வாங்கலாமா என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கும் பங்குச்சந்தை நிபுணர் கௌரங் ஷா, நீண்ட கால அடிப்படையில் நுகர்வு பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து பங்குகளுமே வளர்ச்சி அடையும் என்பதால் தைரியமாக ஐடிசி நிறுவன பங்குகளை வாங்கலாம், அதன் ஒரு பங்கு மதிப்பு 440 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது எனக் கூறியிருக்கிறார்.

ஜிஎஸ்டி வரி: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்! என்னென்ன பங்குகளை வாங்கினால் லாபம்?

வாகன உற்பத்தி நிறுவனங்கள்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறைய போகிறது. இவற்றுக்கான ஜிஎஸ்டி 28 இலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்தை கண்டன. மாருதி சுசுகி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 15,240 ரூபாய் வரை இன்றைய நாளில் விலை உயர்வு கண்டது .

பங்குகள் மதிப்பு உயர்வு: ஹூண்டாய் மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் ஒரு சதவீதம் உயர்ந்து 2,544 ரூபாய் என வர்த்தகமானது. மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6.28% உயர்வு கண்டு 3490 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 1.23 சதவீதம் அதிகரித்து 5,414 ரூபாய் என வர்த்தகமானது. ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 3 சதவீதம் உயர்ந்து 653 ரூபாய் என்ற அளவில் வர்த்தகத்தை வர்த்தகமானது. பஜாஜ் ஆட்டோ ,டிவிஎஸ் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் 1.5% உயர்ந்தன.

சிமெண்ட்: சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28 லிருந்து 18 சதவீதமாக குறைத்து இருக்கிறது அரசு . இதன் காரணமாக சிமெண்ட் விலை குறையப்போகிறது எனவே கட்டுமான பணிகள் அதிகமாக இதன் விற்பனையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த சூழலில் இந்திய பங்குச் சந்தையில் சிமெண்ட் விற்பனையில் ஈடுபடக்கூடிய ஏசிசி ,அம்புஜா சிமெண்ட், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 2 சதவீதம் வரை உயர்வு கண்டன. சர்வதேச தரகு நிறுவனமான நோமுரா ஏசிசி , அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் போன்றவற்றின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது .

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+