பல ஆயிரம் கோடியை லாபமாக ஈட்டிய சன் பாா்மா.. அறிவித்த டிவிடெண்டு எவ்வளவு தெரியுமா..?

மருந்து துறையை சேர்ந்த நிறுவனம் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனுடன் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்டும் அறிவித்துள்ளது. 2025 மார்ச் காலாண்டில் சன் பார்மா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.2,153.93 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் குறைவாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,658.74 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய்
2025 மார்ச் காலாண்டில் சன் பார்மா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.12,958.84 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 8 சதவீதம் வளர்ச்சியாகும். அந்த காலாண்டில் சன் பார்மா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.11,982.90 கோடி ஈட்டியிருந்தது. 2025 மார்ச் காலாண்டில் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் ரூ.816.6 கோடி முதலீடு செய்துள்ளது.

பல ஆயிரம் கோடியை லாபமாக ஈட்டிய  சன் பாா்மா.. அறிவித்த டிவிடெண்டு எவ்வளவு தெரியுமா..?

பதிவு தேதி
சன் பார்மா நிறுவனம் 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.1 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.5.50 இறுதி டிவிடெண்டு அறிவித்துள்ளது. இது எதிர்வரும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதி டிவிடெண்டு பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியை 2025 ஜூலை 7ஆக நிர்ணயம் செய்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடந்தபோது, சன் பார்மா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.67 சதவீதம் குறைந்து ரூ.1,720ஆக இருந்தது.

சிகரெட்
சிகரெட், பிஸ்கட், நோட் புக் என பல்வேறு வணிகங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனம் ஐடிசி லிமிடெட். இந்நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் ஐடிசி நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.19,561.57 கோடி ஈட்டியுள்ளது. இதில் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளிலிருந்து கிடைத்த ஒரு முறை விதிவிலக்கான ரூ.15,179 கோடியும் அடங்கும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.5,013.18 கோடி ஈட்டியிருந்தது.

லாபம்
2025 மார்ச் காலாண்டில் ஐடிசி நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.20,376.3 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.20,349.9 கோடியை வருவாயாக ஈட்டியிருந்தது. ஐடிசி நிறுவனம் 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7.85 இறுதி டிவிடெண்டு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது, 2025 ஜூலை 25ம் தேதி நடைபெற உள்ள நிறுவனத்தின் 113வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இறுதி டிவிடெண்டு பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கான பதிவு தேதியை 2025 மே 28ஆக நிர்ணயம் செய்துள்ளது.மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஐடிசி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.58 சதவீதம் குறைந்து ரூ.426.10ஆக இருந்தது.

நஷ்ட கணக்கை காட்டும் டாடா நிறுவனம்.. 2 நாளில் 35% உயர்ந்த பங்கு விலை.. எந்த நிறுவனம் தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+