டாடா குழுமத்தினை சேர்ந்த நிறுவனங்களான டாடா மோட்டார், டாடா ஸ்டீல் மற்றும் டாடா பவர் பங்குகள் விலையானது இன்று சரிவினைக் கண்டுள்ளது.
இந்த பங்குகள் ஏன் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக ஒரே குழுமத்தினை சேர்ந்த பங்குகள் ஏன் சரிவினைக் கண்டுள்ளன.
டெக்னிக்கலாக இந்த பங்குகள் தெளிவில்லாத நிலையில் இருக்கும் நிலையில், மேற்கொண்டு இப்பங்குகளில் சரிவு தொடருமா? முதலீட்டினை தொடரலாமா? வாருங்கள் பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் சரிவு
டாடா மோட்டார்ஸ் பங்கானது சரியலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாகவும் காணப்படுகிறது. இதே டாடா ஸ்டீல் பங்கு விலையானது மற்றும் டாடா பவர் பங்கு விலையும் பெரியளவில் மாற்றமின்றி ஒரே ரேஞ்சில் காணப்படுகின்றன.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனத்தின் பங்கு விலையானது, தொடர்ந்து 5 அமர்வுகளாக சரிவினைக் கண்டு காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம் என்ன?
டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது இன்று 1.93% சரிவினைக் கண்டு, குறைந்தபட்சமாக 419.05 ரூபாயினை எட்டியது. எனினும் சந்தை முடிவில் 420.10 ரூபாயினையும் எட்டியது. பி எஸ் இ-யில் 7.76 லட்சம் பங்குகள் கைமாறி, 32.70 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஆகியுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,39,527,40 கோடி ரூபாயாக உள்ளது.
முக்கிய லெவல்கள்
கடந்த 5 அமர்வுகளில் மட்டும் டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது, 4.63% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இது வரியயில் 15.61% வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இந்த பங்கின் முக்கிய சப்போர்ட் விலையானது 390 ரூபாய்க்கு அருகில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 440 ரூபாய் என்ற லெவலையும் கணித்துள்ளது.
குறைந்து பின்னர் அதிகரிக்கலாம்
மற்றொரு தரப்பு 402 - 406 ரூபாய் என்ற லெவலுக்கு டாடா மோட்டார்ஸ் விலை சரியலாம். அதேசமயம் ரெசிஸ்டன்ஸ் லெவல் 431 ரூபாயாக கணித்துள்ளனர். இது அடுத்த கட்டமாக 450 - 460 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் டாடா மோட்டார்ஸ் கடந்த சில அமர்வுகளாகவே செல்லிங் அழுத்தத்தில் காணப்படுகிறது. இது இன்னும் சற்று குறையும்பட்சத்தில் வாங்கி வைக்கலாம் என கூறுகின்றனர்.
டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலையானது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சரிவில் காணப்படுகின்றது. இன்று இப்பங்கின் விலையானது 1.77% குறைந்து, 110.90 என்ற குறைந்தட்ச லெவலை எட்டியது. எனினும் முடிவில் 1.46% குறைந்து, 111.25 ரூபாயாக முடிவடைந்தது. இதன் மூலம் 19.30 லட்சம் பங்குகள் கைமாறின. இதன் மதிப்பு 21.61 கோடி ரூபாயாகும்.
டாடா ஸ்டீல் அதிகரிக்கலாம்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1,35,855.78 கோடி ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது கடந்த 5 அமர்வுகளில் 2.49% சரிவினைக் கண்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2.67% சரிவினையும் கண்டுள்ளது. எனினும் இந்த பங்கின் விலையானது டெக்னிக்கலாக ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
வால்யூம் அதிகரிப்பு
இதன் வால்யூம் விகிதமும் கணிசமாக உயர்வினைக் கண்டு வருகின்றது. இதற்கிடையில் இதன் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 116 - 118 ரூபாயாக மதிப்பிட்டுள்ளனர். இந்த லெவலை உடைக்கும்பட்சத்தில் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வரவிருக்கும் நாட்களில் இப்பங்கின் விலையானது 103.8 - 105 என்ற லெவலை தொடலாம். இதனை தொடவும் வாய்ப்பிருக்கிறது. ஆக முதலீட்டாளர்கள் புராபிட் செய்யலாம்.
இலக்கு எவ்வளவு?
எப்படியும் சற்று குறையும்போது டாடா ஸ்டீல் பங்கினை வாங்கி வைக்கலாம். இது மீடியம் டெர்மில் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வலுவான சப்போர்ட் லெவல் 108 ரூபாயாகும். ஆக பங்கு விலையானது தொடர்ந்து அதற்கு மேலாகவே இருக்கும் பட்சத்தில் 116 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இதனை தொடர்ந்து மேலாக செல்லும் பட்சத்தில் 120 ரூபாயினை எட்டலாம்.
டாடா பவர்
டாடா பவர் நிறுவனத்தை பொறுத்தவரையில் இன்று 1.44 சரிவினைக் கண்டு, 225.40 ரூபாயாக காணப்படுகின்றது. இது முடிவில் 1.22% குறைந்து, 225.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று மொத்தம் 5.20 லட்சம் பங்குகள் கைமாறியுள்ளன. இதன் மதிப்பு 11.79 கோடி டர்ன் ஓவர் ஆகியுள்ளது. இதன் சந்தை மதிப்பு 72,182.72 கோடி ரூபாயாக உள்ளது. இருப்பினும் முந்தைய அமர்வில் 0.49% உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1.21% உயர்ந்துள்ளது.
டாடா பவர் சப்போர்ட்
இதன் முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 210 - 200 ரூபாயாகும். இதன் ரெசிஸ்டன்ஸ் லெவல் 240 - 245 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே ரேஞ்ச் பவுண்டில் இருக்கும் இந்த பங்கு விலையானது, மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. அதேசமயம் நீண்டகால நோக்கில் இப்பங்கின் விலையானது முதல் கட்டமாக 247 ரூபாயினை எட்டலாம். அதனை உடைத்தால் 297 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications