பங்குச் சந்தையில் எப்போது ஒரு நிறுவனத்தின் பங்கு உயரும் அல்லது சரியும் என்று உறுதியாக சொல்ல முடியாது. பல மாதங்களாக சரிவை மட்டுமே சந்தித்து வந்த ஒரு பங்கு திடீரென விலை உயர தொடங்கும். இதற்கு உதாரணமாக இ2இ நெட்வொர்க்ஸ் நிறுவன பங்கினை சொல்லலாம். 4 மாதங்களாக சரிவு கண்டு வந்த இப்பங்கு கடந்த 2 தினங்களாக விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையை சேர்ந்த நிறுவனம் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் கிளவுட் சேவைகளை வழங்கி வருகிறது.
நாட்டின் முன்னணி உள்கட்டமைப்பு வணிக நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல் அண்ட் டி) அண்மையில் இந்நிறுவனத்தின் 15 சதவீத பங்குகளை ரூ.1,079.27 கோடிக்கு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 சதவீத பங்குகளை விரைவில் கையகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டு மே 30ம் தேதிக்குள் ரூ.327.75 கோடிக்கு இந்த 6 சதவீத பங்குகளை எல் அண்டி வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல் அண் டி நிறுவனமே, இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2024 செப்டம்பர் காலாண்டு) இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.11.59 கோடி ஈட்டியுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 108 சதவீதம் அதிகமாகும். 2023 செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.5.58 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
2024 செப்டம்பர் காலாண்டில் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.41.6 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 செப்டம்பர் காலாண்டைக் காட்டிலும் 74 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.23.95 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.
முந்தைய நிதியாண்டின் 3வது காலாண்டிலிருந்து இந்நிறுவனத்தின் முடிவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அதேசமயம் தொடர்ச்சியான அடிப்படையில் அதாவது இந்த காலாண்டின் முடிவுகளை முந்தைய காலாண்டின் முடிவுகளுடன் ஒப்பிட்டால் சிறிய சறுக்கலை கொண்டுள்ளது.
இந்நிறுவன பங்கு கடந்த நான்கு மாதங்களால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பை கொடுத்தது. இந்த காலத்தில் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்கு விலை 60 சதவீதம் சரிந்தது. 2024 நவம்பர் 7ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் வர்ததகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.5,487.65ஐ எட்டியது.
ஆனால் அதன் பிறகு பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது. இந்நிலையில், நேற்று தேசிய பங்குச் சந்தையில் இ2இ நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து சர்க்கியூட்டை எட்டியது. நேற்று இப்பங்கின் விலை ரூ.2,308.30ல் முடிவுற்றது.
இந்நிலையில், இன்று தொடர்ந்து 2வது நாளாக இப்பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட்டை தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.115.40 உயர்ந்து ரூ.2,423.70ஆக இருந்தது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications