பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்டு... புதிய உச்சத்தை தொட்ட வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட்

வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனம் ஸ்டீல் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. பெரிய விட்டம் கொண்ட குழாய்களை தயாரிப்பதில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தனது வணிகத்தை திறம்பட மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இந்நிறுவன பங்கு இடம் பிடித்துள்ளது.

மார்ச் காலாண்டு
வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.699.19 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 143 சதவீதம் அதிகமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.287.28 கோடி ஈட்டியிருந்தது.

பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்டு... புதிய உச்சத்தை தொட்ட வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட்

செலவினங்களை குறைத்ததே இந்நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்தற்கு முக்கிய காரணம். 2025 மார்ச் காலாண்டில் வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் செலவினம் ரூ.3,639.32 கோடியாக குறைந்தது. இது 2024 மார்ச் காலாண்டில் ரூ.4,292.37 கோடியாக உயர்ந்து இருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.3,966.86 கோடியாக குறைந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் ரூ.4,534.70 கோடியாக இருந்தது.

இயக்குனர்கள் குழு
வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.5 முக மதிப்ப கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.5 இறுதி டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.1,000 கோடி கடனை குறைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரூ.500 கோடிக்கு மிகாமல் வணிக பத்திரங்கள் அல்லது பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டும் நடவடிக்கைக்கு இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்தது.

வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது காரணங்களால் கடந்த சில வர்த்தக தினங்களாக இப்பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து புதிய 52 வார உச்சமான ரூ.942.65ஐ எட்டியது.

மல்டிபேக்கர் பங்கு
இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 33,350 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 262 சதவீதம் பெருக்கியுள்ளது.

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பணத்தை இழக்க இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த சங்கர் சர்மா
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+