பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், புத்திசாலித்தனமான முதலீட்டாளர்கள் எப்போதும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் தரமான பங்குகளையே தேர்வு செய்வார்கள். அப்படி தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி. பிரபல நிதி ஆலோசனை நிறுவனமான ஆனந்த் நிறுவனத்தின் துணைத் தலைவர் மெஹுல் கோத்தாரி, தற்போதைய சூழலில் 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் அதிக லாபம் தரக்கூடிய 3 பங்குகளை பரிந்துரை செய்துள்ளார்.
சந்தை ஒரு சரிவின் இறுதிக் கட்டத்தை எட்டி வருவதால், இந்த நேரத்தில் முதலீடு செய்வது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது அவரது கணிப்பு. வங்கித் துறை முதல் சர்க்கரை துறை வரை தேர்ந்தெடுத்த அந்த 3 பங்குகள் எவை? அவற்றின் இலக்கு விலை மற்றும் நஷ்டத்தை தவிர்க்க வேண்டிய ஸ்டாப் லாஸ் விவரங்களை விரிவாக பார்ப்போம்.

இந்திய பங்குச் சந்தையானது இந்த மாதத்தின், வாரத்தின் இறுதி நாளான பிப்ரவரி 27, 2026 அன்று மிகுந்த ஏற்ற இறக்கத்துடனும், பலவீனமாகவும் முடிந்தது. வெள்ளிக்கிழமை அன்று சந்தையில் காணப்பட்ட கடும் விற்பனை அழுத்தம் காரணமாக, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை பலத்த சரிவை சந்தித்தன.
வாரத்தின் இடைப்பட்ட நாட்களில் வர்த்தகம் பெரிய மாற்றமின்றி சமநிலையிலும், ஒரு சில நேரங்களில் லேசான உயர்வுடனும் காணப்பட்டது. ஆனால், கடைசி வர்த்தக நாளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி, அதற்கு முந்தைய நாட்களில் கிடைத்த லாபங்கள் அனைத்தையும் துடைத்து எறிந்தது. குறிப்பாக சென்செக்ஸ் 1.17% சரிந்து, 81,287 புள்ளிகளாகவும், நிஃப்டி 317 புள்ளிகள் சரிந்தும் காணப்பட்டது. இதனிடையே சந்தை மதிப்பானது 3 - 5.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பையும் சந்தித்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?
சந்தையில் ஏற்பட்ட சரிவின் மத்தியில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 1 - 1.3% அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. இது பலவீனமான சர்வதேச பொருளாதாரம், புவிசார் அரசியல் பதற்றங்கள், அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் என பல காரணிகள் பல துறை சார்ந்த கடும் சரிவை சந்தித்தன. குறிப்பாக நிதித்துறை, ரியாலிட்டி, ஆட்டோமொபைல் துறை, எஃப்.எம்.சி.ஜி, எனர்ஜி உள்ளிட்ட துறைகள் சரிவில் காணப்பட்டன. இதற்கிடையில் தான் தரகு நிறுவனமானது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், வெல்ஸ்பன் இந்தியா உள்ளிட்ட பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.
டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!
இதில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பங்கை 40 - 38 ரூபாய்க்குள் வாங்கலாம் என்றும், 44 - 48 ரூபாயை இலக்கு விலையாகவும், ஸ்டாப் லாஸ் 36.50 ரூபாயையும் கொடுத்துள்ளது. இதே ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் பங்கை 24 ரூபாய்க்கு வாங்கலாம் என்றும், இலக்கு விலையை 26.50 ரூபாய்க்கும், ஸ்டாப் லாஸ் 22.80 ரூபாய்க்கும் கொடுத்துள்ளது. வெல்ஸ்பன் பங்கை 125 ரூபாய்க்கு வாங்கலாம் என கூறும் தரகு நிறுவனம், இலக்கு விலையை 135 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸை 119 ரூபாயாகவும் கொடுத்துள்ளது. ஆக வரவிருக்கும் வாரத்தில் இப்பங்குகளை கவனமுடன் கையாள்வது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications