இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints), இண்டிகோ (IndiGo) மற்றும் ஹெச்பிசிஎல் (HPCL) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயரும் என்ற பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த வீழ்ச்சி காணப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை ஏறி வரும் நிலையில், விமான எரிபொருள் செலவு அதிகரிப்பால் இண்டிகோ போன்ற ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் லாபம் சரியலாம். அதேபோல் பெயிண்ட் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருள் செலவு அதிகரிப்பால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற பெயிண்ட் நிறுவனங்களும், லாப வரம்பு குறையும் என்பதால் அழுத்தத்தில் காணப்படுகிறது. இதுமட்டுமல்ல எண்ணெய் நிறுவனங்களும் கடும் மார்ஜின் அழுத்தத்திற்கு ஆளாகலாம். ஆக எண்ணெய் விலை அதிகரித்தால், மேற்கண்ட பங்குகள் சரிவை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் இந்த எனர்ஜி லிங்க்டு பங்குகளில் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும். இந்த சரிவு இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? நிபுணர்களின் கணிப்புகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலானது, பெயிண்ட், விமானத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் லாப மார்ஜினையும் இது உறிஞ்சி விடலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், நடப்பு ஆண்டின் உச்சத்தில் இருந்து பெயிண்ட் பங்குகள், விமான பங்குகள், எண்ணெய் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இது மட்டுமல்ல, டயர் துறை மற்றும் அப்ஸ்ட்ரீம் நிறுவனங்கள் என பலவும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
ஹெச்சிபிஎல், ஐஓசிஎல், பிபிசிஎல் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், பங்குகள் விலையானது கடும் சரிவை கண்டுள்ளன. இவற்றில் மார்ஜின் விளிம்பை கச்சா எண்ணெய் விலை ஏற்றமானது எடுத்துக் கொள்ளலாம் என்ற சூழலில், அவற்றின் லாபங்கள் குறையலாம். எனினும் ஓ.என்.ஜி.சி மற்றும் வேதாந்தா, ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்கள் சாதகமான தாக்கத்தை எதிர்கொள்ளலாம்.
யுத்த பூமியாகும் ஈரான்: கச்சா எண்ணெய் விலையால் இந்தியாவிற்கு ஆபத்தா?
பெயிண்ட் மற்றும் டயர் நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படலாம். முக்கியமான மூலப் பொருளின் விலை உயரும் போது அவற்றின் செலவினங்கள் அதிகரிக்கும். இது அதன் லாபத்தை குறைக்க வழிவகுக்கும். இதனால் ஜேகே டயர்ஸ், அப்பல்லோ டயர்ஸ் மற்றும் எம்.ஆர்.எஃப் டயர்ஸ் உள்ளிட்ட டயர் பங்குகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதேபோன்று விமானங்களின் எரிபொருள் செலவானது அதிகரிக்கும் என்பதால், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும். இது மார்ஜினில் பாதிப்பை ஏற்படுத்தும். இது அவற்றின் பங்குகள் விலையும் சரிய வழிவகுக்கலாம். இப்பிரச்சனைக்கெல்லாம் முடிவே இல்லை என்ற கேள்வி எழலாம். ஒன்று இப்போரானது முடிவுக்கு வரவேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் ஏற்பட வேண்டும். இல்லையேல் கச்சா எண்ணெய் உற்பத்தியானது தடைபடாமல், விலை ஏற்றம் காணாமல் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
ரூ.200-க்கும் குறைவான பங்குகள்: பட்ஜெட் விலையில் 3 பங்குகள் அட்வைஸ்! வாங்க ரெடியா?
ஓபெக் நாடுகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து உற்பத்தியை அதிகரிப்பதாக கூறியிருந்தாலும், குறுகிய காலத்தில் இதன் தாக்கம் நிச்சயம் இருக்கும். ஆக மேற்கண்ட பங்குகள் விலையும் குறுகிய காலத்தில் அதிக ஏற்ற இறக்கத்தை காணலாம். ஆக கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

டிரம்ப்-ன் ராஜதந்திரம்.. ரஷ்யாவுக்கும் ஈரானுக்கும் குட்நியூஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications