உலக பொருளாதாரத்தின் இதயமாக கருதப்படும் மத்திய கிழக்கில் இன்று போர் மேகங்கள் சூழ்ந்து விட்டன. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தியுள்ள நேரடித் தாக்குதல்கள், வெறும் ராணுவ மோதல் மட்டுமல்ல, இது ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் பட்ஜெட்டையும் அசைத்து பார்க்கப்போகும் ஒரு பொருளாதார அணுகுண்டும் கூட.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் மேல் இறக்குமதியையே நம்பியுள்ளது. ஆக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1 டாலர் உயரும் போது, இந்தியாவின் இறக்குமதி செலவு பல ஆயிரம் கோடி அதிகரிக்கும். இன்றைய போர் சூழலால், உலகின் 20% எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை 130 டாலரை தாண்டலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அப்படி மட்டும் நடந்துவிட்டால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வது மட்டுமல்லாமல், போக்குவரத்து செலவு அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும். பங்குச் சந்தையில் ஏற்கனவே முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி இழப்பு, திங்கட்கிழமை இன்னும் மோசமான இழப்பை ஏற்படுத்தும்.
இந்திய அரசு இந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்க போகிறது? கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
இஸ்ரேல் - ஈரான் இடையிலான பதற்றமானது, மேற்கொண்டு சர்வதேச அளவிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது பங்குச் சந்தைகளில் செல்லிங் அழுத்தத்தை அதிகரிக்கும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படப்போகும் மாற்றம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு, இந்த எரிசக்தி விலை உயர்வு, ஏற்கனவே பலவீனமாக உள்ள பொருளாதார சூழலில் கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். அடுத்த சில வாரங்களில் இந்த போர் பதற்றம் எப்படி மாறப் போகிறது என்பது மிக முக்கியமானது. தற்போது கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 68 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரித்தால், குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் இந்திய சந்தைகளில் பெரும் அழுத்தத்தை உருவாக்கும்.
முதலீட்டாளர்களே உஷார்! இஸ்ரேல்-ஈரான் போர்: உங்கள் சேமிப்பை பாதுகாப்பா வச்சுக்கோங்க?
கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை தூண்டி, அனைத்து துறைகளிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே பல்வேறு பதற்றங்கள் மத்தியில் 68 டாலர்கள் என்ற நிலையில் காணப்படும் எண்ணெய் விலையானது, மேற்கொண்டு வரவிருக்கும் வாரத்தில் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தால் பெரிய அளவில் அதிகரிக்கும். அதுவும் குறுகிய காலத்தில் அதிகரிப்பு இருக்கும். இது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது அடுத்த கட்ட போர் சூழலை பொறுத்து மாறுபடும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தாலோ அல்லது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை தடுத்தாலோ, உலகளாவிய எண்ணெய் விநியோகம் பெருமளவு குறையும். இது கச்சா எண்ணெய் விலையில் உடனடியாக பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும். அதே சமயம், ஈரானின் விநியோகம் பாதிக்கப்பட்டால், தனது உற்பத்தி திறனை அதிகரிக்க தயார் என சவுதி அரேபியா கூறியிருப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. மேலும், ஏப்ரல் 1 முதல் உற்பத்தியை சுமார் நாள் ஒன்றுக்கு 1,67,000 bpd (பேரல்/நாள்) அளவுக்கு உயர்த்த ஓபெக் அமைப்பு திட்டமிட்டுள்ளதையும் மறந்துவிடக் கூடாது. எப்படி இருப்பினும் குறுகிய காலத்தில் நிச்சயம் ஒரு விலையேற்றம் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இது இந்திய பங்குச் சந்தை தொடங்கி, அனைத்து நிதி சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். ரூபாய் சரிவுக்கு வழிவகுக்கலாம். பணவீக்கத்தை தூண்டலாம். எல்லாவற்றுக்கும் மேலாக வர்த்தக பற்றாக்குறையை ஊக்குவிக்கலாம். மொத்தத்தில் இந்திய பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது..
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications