மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தால் உலகளாவிய பங்குச் சந்தைகள் இன்று ரத்த களறியாகி வரும் நிலையில், முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது டாடா குழுமத்தின் தேஜஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks). சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட முன்னணி குறியீடுகள் சரிவை சந்தித்தாலும், இந்தப் பங்கு மட்டும் தடாலடியாக 15% உயர்ந்து, கடந்த 3 வர்த்தக தினங்களில் மட்டும் சுமார் 58% லாபத்தை வாரி வழங்கியுள்ளது.
வெறும் 13 வார கால புதிய உச்சத்தை எட்டியது மட்டுமல்லாமல், ஜப்பானின் டெக் ஜாம்பவானான NEC கார்ப்பரேஷனுடன் இணைந்து சர்வதேச அளவில் 5G தொழில்நுட்ப கருவிகளை தயாரிப்பதற்கான மெகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதே இந்த அதிரடி வேக உயர்வுக்கு பின்னால் இருக்கும் ரகசியமாகவும் பார்க்கப்படுகிறது. உலகமே பொருளாதார வீழ்ச்சிக்கு அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், டாடா-வின் இந்த டெக்னிக் இந்தியாவின் 5G கனவை உலக அரங்கிற்கு எப்படி கொண்டு செல்கிறது? பங்கு விலை எப்படி இருக்கும்? தற்போதைய சூழல் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

டாடா குழுமத்தைச் சேர்ந்த தேஜஸ் நெட்வொர்க்ஸ் பங்கானது இன்று 15.4% ஏற்றம் கண்டு காணப்படுகிறது. இது 13 வார உச்சமான 502.95 ரூபாயை எட்டியுள்ளது. ஈரான் - இஸ்ரேல் பிரச்சனை காரணமாக இந்திய சந்தையானது அதல பாதாளத்தை எட்டியுள்ள நிலையில் கூட, டாடா குழும பங்கானது அதன் முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேஜஸ் நெட்வொர்க்ஸ் பங்கு விலையானது இன்று சந்தை தொடக்கத்தில் 421.40 ரூபாயாக தொடங்கியது. ஏற்றத்துடன் தொடங்கிய இப்பங்கானது 502.95 ரூபாய் என்ற உச்சத்தையும் எட்டியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வரும் இப்பங்கானது, இம்மூன்று நாட்களில் மட்டும் 58.25% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த அக்டோபர் 2025 முதல் ஜனவரி 2026-க்கு இடையில் அழுத்தத்தில் இருந்த பங்கானது, பிப்ரவரி மாதத்தில் 28% அளவுக்கு வலுவான ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் அதன் சமீபத்திய நஷ்டத்தை ஈடுகட்டி உள்ளது.
ஏசியன் பெயிண்ட்ஸ் முதல் இண்டிகோ வரை.. சரசரவென சரியும் பங்குகள்! முதலீட்டாளர்கள் தப்பிப்பது எப்படி?
கடந்த பிப்ரவரி 26 அன்று தேஜஸ் நிறுவனமானது NEC கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் 5G தொழில்நுட்ப கருவிகளை தயாரிப்பதற்கான மெகா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தேஜஸ் நிறுவனமானது 4G மற்றும் 5G ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் (RAN) தயாரிப்புகளை தயாரிப்பதில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக அதிக செயல்திறன் கொண்ட 32TR மற்றும் 64TR Massive MIMO ரேடியோக்களை வழங்குகிறது. இது நெட்வொர்க் வேகத்தையும், ஒரே நேரத்தில் பல பயனர்கள் இணைவதையும் உறுதி செய்கிறது. ஆக இதனுடனான தேஜஸ் நிறுவனத்தின் இணைப்பு, இந்திய 5ஜி சந்தையில் மேலும் மிகப்பெரிய வளர்ச்சியை ஈட்ட இது உதவும்.
கடந்த 40 வாரங்களில் தேஜஸ் பங்கானது 67% மேலாக சரிவை கொண்டிருந்த நிலையில், ஒரு பலவீனமான கட்டமைப்பில் இருந்தது. ஆனால் கடந்த 6 வாரங்களாகவே மீண்டும் ஒரு வலுவான மீட்சியை கண்டு வருகிறது. இது ஒரு நல்ல அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாக பார்க்கும்போது முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 516 ரூபாய்க்கு அருகில் பார்க்கப்படுகிறது. ஆக அடுத்து சந்தையானது ஏற்றம் காணும் போது, இந்த லெவலை கடந்தால், தொடர்ந்து இப்பங்கானது ஏற்றம் காண வாய்ப்புள்ளது. ஒரு வேலை மீண்டும் சரிவு இருந்தால், கவனமாக பார்த்து முதலீட்டை திட்டமிட வேண்டும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆக எச்சரிக்கையுடன் சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications