இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பு இயந்திரமாகவும், இந்திய ஜிடிபியில் ஒரு கணிசமான பங்கை தன் வசம் வைத்திருக்கும் ஒரே துறை சிறு குறு தொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSME-யினர் தான்.
இந்த துறை கொரோனா லாக் டவுனால் ஏற்பட்ட சிக்கல்கள் எல்லாம் இல்லாமல் திரும்பிவிட்டாலே, வேலை வாய்ப்பு, நுகர்வு என பல பிரச்சனைகள் ஒரே நேரத்தில் சரியாகிவிடும்
எனவே கொரோனா சிக்கலில் இருந்து MSME தரப்பினரை மீட்க அரசு பிரத்யேகமாக Guaranteed Emergency Credit Line திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு.
விவரங்கள் இதோ
இந்த கடனை யார் எல்லாம் வாங்கலாம், எவ்வளவு ரூபாய் வரை வாங்கலாம், வாங்குவதற்கான தகுதி என்ன, இந்த வகையான கடனில் இருக்கும் நன்மைகள் என்ன என்பதை இரண்டு பாகங்களாக இரண்டு கட்டுரையில் எழுதி இருக்கிறோம்.
MSME-க்கான Guaranteed Emergency Credit Line பாகம் 1!
MSME-க்கான Guaranteed Emergency Credit Line நன்மைகள் என்ன? பாகம் 2!
விவரங்களைப் படிக்க க்ளிக் செய்யவும்.
நிதி அமைச்சகம் பரிசீலனை
கடந்த ஜூன் 09, 2020 அன்று, மத்திய நிதி அமைச்சகம், MSME தரப்பினருக்கு அறிவித்த சிறப்புக் கடன் எப்படி வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என மூத்த வங்கி அதிகாரிகளோடு பரிசீலனை செய்து இருக்கிறது. அதோடு, சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான அமைச்சகம், ஜூன் 10, 2020 அன்று மாநில அளவில் இருக்கும் வங்கி கமிட்டிக்களோடு ஒரு ஆன்லைன் கூட்டம் நடத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அதிர்ச்சி தகவல்
இதுவரை, Guaranteed Emergency Credit Line திட்டத்தின் கீழ் அனுமதித்து இருக்கும், 3 லட்சம் கோடி ரூபாய் வரம்பில் வெறும் 20,000 கோடி ரூபாய் அளவிலான கடன்கள் தான் MSME தரப்பினருக்கு கொடுத்து இருக்கிறார்களாம். மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகள் இன்னும் நிறைய கடன் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம்.
இலக்கு இல்லை
தனிப்பட்ட முறையில், ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் என எந்த ஒரு இலக்கும் நிர்ணயிக்கவில்லையாம். இருப்பினும், வங்கிகள், தங்களின் வங்கிக் கிளை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தகுதியான சிறு குறு தொழில்முனைவோர்களிடம் இந்த Guaranteed Emergency Credit Line திட்டத்தை எடுத்துச் சொல்லி தேவையான கடனைக் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications