உச்சத்தில் இருந்து ரூ.2000 சரிவில் தங்கம் விலை.. நிபுணர்களின் அட்டகாசமான பரிந்துரைய கேளுங்க!

தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் 10 கிராமுக்கு 52,300 ரூபாயினை எட்டிய நிலையில், இன்று 50,650 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.

இதன் மூலம் கிட்டதட்ட 2000 ரூபாய் சரிவில் தான் தங்கம் விலையானது காணப்படுகிறது.

இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை சற்று ஏற்றம்

தங்கம் விலை சற்று ஏற்றம்

எனினும் தற்போது தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று அதிகரித்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய கமாடிட்டி சந்தையிலும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியினை திடீரென அதிகரித்தது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது.

ரூபாய் மதிப்பு சரிவு

ரூபாய் மதிப்பு சரிவு

அதோடு தங்கம் விலையினை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது சரிவினைக் காண வழிவகுத்துள்ளது.

தங்கம் விலையானது கடந்த அமர்வில் அதன் 9 மாத சரிவான 1741.87 டாலர்களை தொட்ட பிறகு இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது குறைந்த விலையில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

20 வருட உச்சத்தில் டாலர்

20 வருட உச்சத்தில் டாலர்

அதோடு கடந்த சில தினங்களாகவே தங்கம் விலைக்கு எதிராக இருந்து வந்த டாலரின் மதிப்பானது, தற்போது 20 வருட உச்சத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இது தங்கம் விலையில் சற்று அழுத்தத்தினை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. தங்கம் விலை மட்டும் அல்ல, வெள்ளி விலை, பிளாட்டினம் விலை என அனைத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நல்ல சான்ஸ்

நல்ல சான்ஸ்

இன்று சற்று தங்கம் விலையானது வலுவாக காணப்பட்டாலும், கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையினை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுக்கிறது.

ஆதரவளிக்கும் காரணிகள்

ஆதரவளிக்கும் காரணிகள்

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தங்கமானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் ஒரு முதலீடாகவே உள்ளது. எனினும் பணவீக்கம், முதலீடுகள் வெளியேற்றம், அரசியல் பதற்றம், பணவீக்கம், கொரோனா பெருந்தொற்று, கச்சா எண்ணெய் விலை யேற்றம், கமாடிட்டி பொருட்கள் விலையேற்றம் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது. தங்கத்திற்கு ஆதரவாக அமைந்தது. இது தங்கத்தினை குறைந்த விலையில் நீண்டகால நோக்கில் முதலீட்டு ரீதியாக வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+