இந்தியாவை பந்தாட போகும் அமெரிக்கா.. டிரம்ப் ஒரு கையெழுத்து போட்டால் போதும்.. 100% வரி விதிப்பு!

உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவின் பலத்தை குறைக்க டிரம்ப் தலைமையிலான அரசு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மற்றும் ஏரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் 262 -159 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த மசோதாவின் படி டிரம்ப் 100 சதவீதம் வரி விதிக்க வேண்டுமாயின் இறுதியாக அதை நடைமுறைப்படுத்த ஒரு கையெழுத்திட வேண்டும். டிரம்ப் இதில் கையெழுத்திடுவாரா..? இல்லையா..? என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வி.

இந்தியாவை பந்தாட போகும் அமெரிக்கா.. டிரம்ப் ஒரு கையெழுத்து போட்டால் போதும்.. 100% வரி விதிப்பு!

இந்தியா அமெரிக்கா உடன் வர்த்தகம் ஒப்பந்தம் குறித்து பேசி வரும் இதேவேளையில் மேற்கத்திய நாடுகளின் தடைகள் கட்டுப்பாடுகளை மீறி ரஷ்யாவிடம் இருந்து மறைமுகமாக Shadow Fleet மூலம் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

இதற்கிடையில் 100 சதவீதம் வரி விதிப்பு தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. சரி இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

Also Read

இந்தியா - அமெரிக்கா மத்தியிலான வர்த்தகத்தில் 2026-27 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 42.8 பில்லியன் டாலராக உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் இறக்குமதி பொருட்களின் மதிப்பு 28 பில்லியன் டாலராக உள்ளது. ஒவ்வொரு மாதமும் 3- 6 பில்லியன் டாலர் வரையில் உபரி ஏற்றுமதியை கொண்டுள்ளது இந்தியா.

இதேபோல் இந்தியாவில் இருந்து அதிகளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் துறைகளில் பார்மா, டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் கூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கெமிக்கல், ரத்தினம் மற்றும் நகைகள் ஆகியவை முக்கிய இடம் வகிக்கிறது.

Recommended For You

இதில் முக்கியமாக பார்மா துறையில் இந்தியாவில் தயாரிக்கும் பெரும்பாலான மருந்துங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்காகவே தயாரிக்கப்படும் காரணத்தால் இந்திய நிறுவனங்கள் பெரும் லாபத்தை பதிவு செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் வர்த்தகம் செய்வதற்காகவே பல ஆண்டுகளாக இந்திய பார்மா நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. தற்போது 100% சதவீதம் வரி விதிக்கப்பட்டால் பெரும் வர்த்தக இழப்பு ஏற்படும்.

அடித்தாக தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதி பொருளாக இருக்கும் டெக்ஸ்டைல் துறை இந்த 100 சதவீத வரியால் பாதிக்கப்படும். ஏற்கனவே டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் பங்களாதேஷ், சீனா, வியட்நாம் என பல நாடுகளுடன் திருப்பூர் உற்பத்தியாளர்கள் போட்டிப்போட்டு குறைந்த லாபத்தை பெற்று வரும் வேளையில் இந்த 100 சதவீத வரி விதிப்பு மூலம் மேலே குறிப்பிட்ட நாடுகள் இந்தியாவின் வர்த்தகத்தை மொத்தாமாக எடுத்துக்கொள்ளும்.

இதை தாண்டி ஆந்திராவின் இறால் வர்த்தகம், குஜராத்தின் வைர நகைகள், இந்தியா முழுவதும் இருக்கும் நகை உற்பத்தியாளர்கள், சென்னை, பெங்களூரில் இருக்கும் எலகட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள், என மாநிலத்திற்கு ஒரு துறை கட்டாயம் பாதிக்கப்படும் வகையில் இந்த 100 சதவீத வரி உள்ளது.

அமெரிக்காவின் வரிக்கு ஏற்கனவே கனடா பதிலடி கொடுத்து வரும் வேளையில் டிரம்ப் மிட்டேர்ம் தேர்தல் வரும் வேளையில் 100 சதவீத வரியை இந்தியா, சீனா மீது விதிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் டிரம்ப் இந்தியா, சீனா மாது வரி விதித்தால் கட்டாயம் பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோடு 100 சதவீத வரி விதித்தால் பார்மா, டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் கூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கெமிக்கல், ரத்தினம் மற்றும் நகைகள் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையிலும் பெரும் சரிவை எதிர்கொள்ள நேரிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+