இந்தியாவின் தங்க இறக்குமதி குறைந்தது!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியாவின் தங்க இறக்குமதி குறைந்தது!
டெல்லி: உலகளவில் தங்கத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதையடுத்து இந்தியாவில் தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதையடுத்து தங்க வியாபாரிகள் தங்கம் இறக்குமதியையும் குறைத்துக் கொண்டுள்ளனர்.

வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை விட கடந்த இரு மாதங்களில் ரூ. 30,000 கோடி அளவுக்கு குறைந்த தங்கமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், தங்க நகைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்ததே. மேலும் தங்க இறக்குமதி மீது கடந்த மத்திய பட்ஜெட்டில் 2 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் இன்னொரு காரணமாகும்.

இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு (current account deficit) தங்க இறக்குமதியே முக்கிய காரணமாக விளங்குவதால், அதைக் கட்டுப்படுத்த இறக்குமதியை வரியை 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக்கினார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் நினைத்தது போல இறக்குமதியும் குறைந்துவிட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்தது:

இந் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று கடுமையான சரிவும் காணப்பட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.256ம், பார் வெள்ளி விலை ரூ.1,490ம் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2,799 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,935 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,392க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.56.70 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.52,995 ஆகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold imports by India down $6.2 billion in April-May | இந்தியாவின் தங்க இறக்குமதி குறைந்தது!

Gold imports to India, one of the world's largest buyers, came down by $6.2 billion in the first two months of the current fiscal that began in April, compared with the year-ago period, finance secretary R.S. Gujral said on Friday. Gold buying in India has been sluggish after prices rose to record highs and the federal government doubled import duty on the yellow metal to 4 percent. Gold imports have been widely blamed as one of the reasons for the country's widening current account deficit.
Story first published: Friday, June 22, 2012, 18:13 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns