உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கத்தின் விலை உயர்வால் நகைக்கடை பக்கம் தலைகாட்டவே அஞ்சியவர்களுக்கு, இப்போது ஒரு குட் நியூஸ். கடந்த வாரங்களுக்கு முன்பு வரை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை, சமீபத்திய வாரங்களாக அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இது அதன் வரலாற்று உச்சத்திலிருந்து 18,000 ரூபாய் வரை சரிந்துள்ளது. தங்கம் விலை இனி விலை குறையவே குறையாது என்று நினைத்திருந்த பலருக்கும், ஒரு பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றங்கள் தணிந்து வருவது சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான மோகத்தை சற்று குறைத்துள்ளது. இந்த சரிவு ஒரு தற்காலிகமானதா அல்லது இனி வரும் நாட்களில் தங்கம் மீண்டும் 2 லட்சம் என்ற இலக்கை நோக்கிப் பாய்ந்து செல்லுமா? இப்போதே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கம் வாங்கி குவிப்பது சரியா அல்லது இன்னும் விலை குறையும் என காத்திருக்கலாமா? தங்கத்தின் இந்த அதிரடி விலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களையும், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய நுணுக்கங்களையும் பார்க்கலாம்.

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில், தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். ஆனால் தற்போது சுமார் 18,000 ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய கிழக்கில் நடந்து வரும் பதற்றமான சூழல் ஆனது, இன்று வரையில் தணிந்த பாடு இல்லை. இதனால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற உலக நாடுகள் பலவும் அதிர்ந்து போய் உள்ளன. பங்குச் சந்தைகள் தாறுமாறாக காணப்படுகிறது. இந்த சூழலில் பாதுகாப்பு புகலிடமான தங்கமும் சற்று அழுத்தத்தில் காணப்படுவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வாடகை வீட்டில் இனி இதுதான் சட்டம்! அட்வான்ஸ் முதல் பிரைவசி வரை.. தெரிஞ்சுக்க வேண்டிய அப்டேட்ஸ்!
இருப்பினும் நிச்சயமற்ற புவிசார் அரசியல் பதற்றங்கள், பலவீனமான அமெரிக்க டாலர் என பலவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இந்திய சந்தையை பொறுத்த வரையில் 10 கிராம் தங்கமானது அதன் உச்ச விலையில் இருந்து 18,000 ரூபாய் சரிந்துள்ள நிலையில், அதன் அடுத்த இலக்கு வரும் மாதங்களில் 2 லட்சம் ரூபாயா என்ற கேள்வியையும் முதலீட்டாளர்கள் எழுப்பி வருகின்றனர்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சுமார் 1,61,675 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இது அதன் வரலாற்று உச்சமான 1,80,779 ரூபாயில் இருந்து பார்க்கும்போது சுமார் 19,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. இது காமெக்ஸ் சந்தையில் 5,158.7 டாலர்களாக காணப்படுகிறது. இது அதன் வரலாற்று உச்சமான 5,626.80 டாலர்களுடன் ஒப்பிடும்போது, தற்போது 468 டாலர்கள் கீழாக காணப்படுகிறது. இந்த உச்சமானது அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் விரைவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று விடுத்த எச்சரிக்கையை அடுத்து, உச்சம் தொட்டது.
பெண்களுக்கு மாதா மாதம் ரூ.7,000 வருமானம்! எல்.ஐ.சி-யின் சூப்பர் திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது?
நிபுணர்கள் தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறுகிய காலத்தில் ஒருங்கிணைந்த கட்டத்தில் இருக்கும். ஆனால் ஒரு முறை அதை உடைத்து மேலாக ஏற்றம் காணும்போது புதிய உச்சத்தை எட்டும் என கூறுகின்றனர். பத்திர வருமானம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய வங்கிகள் தங்கத்தை தொடர்ந்து வாங்கலாம். இது நீண்ட கால அடிப்படையில் தங்கத்திற்கு ஆதரவாக அமையும். மேற்கொண்டு போர் பதற்றமும் ஆதரவாக அமையலாம். இதன் காரணமாக சர்வதேச சந்தையில் மீண்டும் 5,600 டாலர்களை கடக்கலாம். அதேசமயம் இந்திய கமாடிட்டி சந்தையிலும் 2 லட்சத்தை நெருங்கும் என கூறுகின்றனர்.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
ஆபரண சந்தையை பொறுத்த வரையில் திருமணங்கள் அல்லது சுபகாரியங்களுக்காக தங்கம் வாங்க வேண்டியிருந்தால், விலையில் ஏற்படும் தினசரி மாற்றங்களை கண்காணிப்பது நல்லது. ஒரே நாளில் முழுத் தொகையையும் செலவழிப்பதற்கு பதில், விலை குறைவு ஏற்படும் நாட்களில் சிறுக சிறுக வாங்குவது புத்திசாலித்தனம்.

முதலீட்டு நோக்கம்: தங்கம் விலை சர்வதேசச் சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய அரசியல் சூழல்களை (குறிப்பாக அமெரிக்கா-ஈரான் பதற்றம்) பொறுத்து மாறுகிறது. நீண்ட கால முதலீட்டுக்கு தங்கம் எப்போதும் பாதுகாப்பானதுதான் என்றாலும், சந்தை உச்சத்தில் இருக்கும் போது மொத்தமாக வாங்குவதை தவிர்க்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+