முதலீடு என்றாலே பலருக்கும் குழப்பம் தான். பாதுகாப்பான பிபிஎஃப்-ஆ அல்லது வங்கி எஃப்டி-ஆ? பெண் குழந்தைக்கான சுகன்யா சம்ரிதி திட்டமா அல்லது ஓய்வுக்காலத்திற்கான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமா? இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் ஓடுகிறதா? ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. வட்டி விகிதங்கள் மற்றும் வரிச் சலுகைகள் உண்டு. உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் கால அவகாசத்திற்கு ஏற்ற சரியான திட்டத்தை தேர்வு செய்வது எப்படி? உங்கள் பணத்தை அதிக லாபத்துடன் பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கான திட்டம் எது? எந்த சமயத்தில் எதை தேர்வு செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

ஓய்வூதிய நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஓ தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 2025-26 ஆம் நிதியாண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) வைப்புத்தொகை மீதான வட்டி விகிதத்தை 8.25% ஆகவே வைத்துள்ளது. இது சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற சூழல்கள் மத்தியில் வட்டி விகிதம் மாறாமல் அப்படியே இருக்கிறது. வட்டி விகிதங்கள் மாறாவிட்டாலும், மற்ற சேமிப்பு திட்டங்களை காட்டிலும் இந்த நிச்சயமற்ற சூழலிலும் வட்டி ஓரளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால் இது மட்டும் போதுமா என்றால் நிச்சயம் இல்லை. இருப்பினும் நிலையான வருமானம் உண்டு. ஆனால் ஊழியர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை பொறுத்த வரையில் வட்டி விகிதம் 8.2% ஆகும். இது மூத்த குடிமக்களுக்கு என பிரத்யேகமாக வழங்கப்படும் ஒரு சிறப்பு திட்டமாகும். அதேபோல் பெண் குழந்தைகளுக்காக வழங்கப்படும் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு வட்டி விகிதம் 8.2% ஆகும். இது பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் என்பதோடு, நீண்ட கால லாக் இன் காலமும் உண்டு. ஆக இது நீண்ட கால சேமிப்பையும் உறுதி செய்யும்.
ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டத்திற்கான வட்டி விகிதமானது 7.7% ஆகும். இதில் இபிஎஃப்-ஐ வட்டி விகிதத்தை விட வட்டி குறைவு. முதிர்வுத் தொகைக்கு வரி உண்டு. பலரும் அறிந்துள்ள பிரபல திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதமானது 7.1% ஆகும். இதில் வருமானம் சற்று குறைவு தான். இருப்பினும் EEE வரிச்சலுகை கிடைக்கும். 15 ஆண்டுகால திட்டம் என்பதால் கூட்டு வட்டியின் பலன் அதிகம்.
OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!
வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களை எடுத்துக் கொண்டால், சற்று நீண்ட கால திட்டமாக தேர்வு செய்தால் வட்டி விகிதம், 6.5% முதல் 7.5% வரையில் கிடைக்கும். இதிலும் வரி பிடித்தம் இருக்கும். ஆக வரி பிடித்தம் போக வருமானம் பணவீக்கத்தை தாண்டி கிடைக்குமா என்பதே பெரிய கேள்விக்குறி தான். மேற்கண்ட திட்டங்களில் அனைத்து திட்டங்களை காட்டிலும் வருங்கால வைப்பு நிதியில் வருமானம் சற்று அதிகம். ஆனால் அதில் எல்லோராலும் சேமிக்க முடியாது. இருப்பினும் இதில் உள்ள ரிஸ்க் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால், குறைக்கப்படும் அபாயம் உண்டு. ஆனால் பிஎஃப் சேமிப்பு நிச்சயம் சிறந்த சேமிப்பு தான். நான் பிஎஃப்-ல் எல்லாம் செய்ய முடியாது, ஆனால் என் பெண் குழந்தைக்கு முதலீடு செய்து வைக்க வேண்டும் என நினைப்பவர்கள், சுகன்யா சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயதானவர்கள் எனில் மூத்த குடிமக்கள் சேமிப்பையும் கருத்தில் கொள்ளலாம்.
இருப்பினும் இளம் முதலீட்டாளர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாலும், இளம் வயதில் ஈக்விட்டி சார்ந்த முதலீடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆக மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் முடக்காமல், பிரித்து முதலீடு செய்வது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!



Click it and Unblock the Notifications