வாடகை வீட்டில் இனி இதுதான் சட்டம்! அட்வான்ஸ் முதல் பிரைவசி வரை.. தெரிஞ்சுக்க வேண்டிய அப்டேட்ஸ்!

சொந்த வீடுங்கிறது பலருக்கும் இன்றும் ஒரு எட்டாக்கனிதான். சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை வாடகையா கொடுத்து விட்டு, மீதிப் பணத்தில் குடும்பத்தை நடத்துவதே கடினம். ஆனா அந்த வாடகை வீட்டுலயும் நிம்மதி இருக்க முடியுதான்னா நிச்சயமா பலரின் பதில் இல்லை என்று தான் வரும். பல இடங்களில் மாதம் 10,000 ரூபாய் வாடகைக்கு, 1 லட்சம் அட்வான்ஸ் என கேட்கிறார்கள். சில இடங்களில் 10 மாத வாடகை அட்வான்ஸ்.

சில வீடுகளில் அதை செய்யாதீங்க, இதை செய்யாதீங்க என பல ரூல்ஸ் வேறு. அதிலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பல இடங்களில், வீட்டிற்கு அதிக உறவினர்களோ அல்லது நண்பர்களோ வந்தால் கூட கேள்வி தான். வீட்டு உரிமையாளர் எப்போ வருவாங்களோ? என்ன கேள்வி கேட்டு படுத்த போறாங்கன்னு தெரியாம பயப்படுறது, ஏதாவது ஒரு பிரச்சனைன்னு சொன்ன நேரத்துக்கு ரிப்பேர் பண்ணித் தராம அலைய விடுறதுன்னு என லிஸ்ட் பெருசா இருக்கும். இதெல்லாம் ஒரு வாடகைதாரரா இருந்தா நிச்சயம் உங்களுக்கு புரிந்திருக்கும்.

வாடகை வீட்டில் இனி இதுதான் சட்டம்! அட்வான்ஸ் முதல் பிரைவசி வரை.. தெரிஞ்சுக்க வேண்டிய அப்டேட்ஸ்!

இந்த பிரச்சனைகெல்லாம் முடிவே இல்லையா என்ற புலம்பியர்களுக்கு, ஒரு விடிவு காலம் வந்து விட்டது எனலாம். 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகள், வாடகைதாரர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வீட்டு உரிமையாளர்கள் இஷ்டத்துக்கு சட்டம் பேச முடியாது, அதே சமயம் வாடகைதாரர்களுக்கும் சில கடமைகள் இருக்கு. அந்த புதிய விதிகள் என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியாவின் வாடகை சந்தையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வர, 2026-ம் ஆண்டிற்கான புதிய வாடகை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இது வெறும் கட்டுப்பாடு மட்டுமல்ல, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இருவருக்குமே சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் ஒரு சீர்திருத்தமாகும்.
வெரைட்டி டிஷ் எல்லாம் இல்ல! கேஸ் தட்டுப்பாட்டால் சென்னை ஹோட்டல்களுக்கு வந்த சோதனை!
இனி வழக்கமான வாய்வழி ஒப்பந்தங்களுக்கு இடமில்லை. ஒவ்வொரு வாடகை ஒப்பந்தமும் கையெழுத்தான 60 நாட்களுக்குள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். இது போலியான ஒப்பந்தங்கள் மற்றும் சட்டவிரோத வெளியேற்றங்களை தவிர்க்க உதவும். பதிவு செய்ய தவறினால் 5,000 ரூபாயில் இருந்து அபராதம் விதிக்கப்படும்.

அதோடு சாமானிய மக்களுக்கு பெரும் ஆறுதல் கொடுக்கும் விதமாகவும் ஒரு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் இனி தன்னிச்சையாக பெரிய தொகையை அட்வான்ஸாக கேட்க முடியாது. இனி அட்வான்ஸ் ஆக வீட்டு வாடகையில் அதிகபட்சம் 2 மாத வாடகை மட்டுமே கேட்க வேண்டும். இதே வணிக ரீதியான பயன்பாடு என்றால், அதிகபட்சம் 6 மாத வாடகை மட்டும் கேட்க வேண்டும். இது வாடகைதாரர்களின் நிதிச் சுமையை குறைக்க உதவிகரமாக இருக்கும்.
EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?
சில இடங்களில் வாடகையை வீட்டு உரிமையாளர்கள் நினைத்த நேரத்தில் உயர்த்துவார்கள். ஆனால் இனி வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வாடகையை உயர்த்த முடியும். வாடகை உயர்வு குறித்து 90 நாட்களுக்கு முன்பே உரிமையாளர் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆக இனிமேல் திடீரென வாடகையை உயர்த்த முடியாது.

மேலும் இனி முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல், உரிமையாளர் மின்சாரம் அல்லது தண்ணீரைத் துண்டித்து வாடகைதாரரை வெளியேற்ற முடியாது. இது சட்டவிரோதமான ஒன்று. வாடகைதாரரின் அனுமதியின்றி அல்லது சட்டப்பூர்வ உத்தரவின்றி வீட்டைப் பூட்டுவது தவறான ஒன்று. மொத்தத்தில் வாடகைதாரரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கூடாது. ஒரு வேளை மேற்கூறியவாறு எந்தவொரு உரிமையாளரும் அத்துமீறலில் ஈடுபட்டால், அது குற்றவியல் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும். வாடகைதாரர்கள் இது குறித்து வாடகை ஆணையத்திடம் அல்லது தீர்ப்பாயத்திடம் புகார் அளிக்கலாம்.
ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!
அதேசமயம் வாடகைதாரர் வாடகை தராமல் இருப்பது, சொத்துக்கு சேதம் விளைவிப்பது அல்லது ஒப்பந்த விதிமுறைகளை மீறுவது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே, உரிமையாளர் தீர்ப்பாயம் மூலம் சட்டப்பூர்வமாக வெளியேற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்.

வீட்டில் தண்ணீர் குழாய் உடைப்பு, மின்சார கோளாறு போன்ற அத்தியாவசிய பணிகளை உரிமையாளர் 30 நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையெனில், வாடகைதாரரே சரி செய்துவிட்டு, அந்த தொகையை வாடகையில் கழித்து கொள்ளலாம். ஆனால் அதற்கு முறையான ரசீதுகளை வைத்திருக்க வேண்டும்.
பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?
நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வாடகைத் தகராறுகளை தீர்க்க ரென்ட் ட்ரிப்யூனல் (Rent Tribunal) அமைக்கப்பட்டுள்ளது. வாடகை பாக்கி அல்லது சொத்து சேதம் தொடர்பான புகார்களுக்கு 60 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகைதாரர்கள் இனி போலிஸ் சரிபார்ப்பு முடித்து, ஒப்பந்தத்தை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யுங்கள்.

இந்த புதிய விதிகள் வாடகை வீட்டு சந்தையை ஒரு முறையான மற்றும் டிஜிட்டல் அமைப்பாக மாற்றுகிறது. இது இரு தரப்புக்கும் இடையில் தேவையற்ற சட்டப் போராட்டங்களை குறைத்து, நிம்மதியான வாடகை வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+