பெண்களுக்கான சில முதலீட்டு மந்திரங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கின்றனர். தங்களின் கேரியரை வளர்ப்பதோடு, குடும்ப வாழ்வாதாரத்தையும் கூட்டுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் தங்கள் முதலீட்டு திட்டங்களை தீர்மானிக்க மறந்து விடுகிறார்கள். இதனை முடிவு செய்ய அவர்கள் தங்களின் கணவன் அல்லது தந்தையை நம்புகிறார்கள்.

விழித்திடுங்கள் பெண்களே; உங்கள் முதலீடுகளுக்கு, நிதி குறிக்கோள்களுக்கு இன்றே திட்டம் போடுங்கள். தேவைபட்டால் நிதி ஆலோசனை கூட பெறுங்கள். பணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் முதலீட்டு பாங்கையும் ஆலோசித்து புரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் கஷ்ட காலங்களில் அதனை பற்றிச் சந்திக்க தயாராகலாம்.

இதோ உங்களுக்காக பல முதலீட்டு வகைகள்:

தங்கம்
 

தங்கம்

ஒவ்வொரு பெண்ணின் மிக விருப்பமான பொருளாகும். தங்க நகைகளில் முதலீடு செய்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். பல வருடங்களாக பளபளப்பு குறையாமல் இருக்கும் தங்கத்தில் முதலீடு செய்வதென்பது சிறந்தது. அப்படி செய்ய முடிவெடுத்தால் தங்கம் ETF, நிதி அல்லது காசுகள் வடிவில் முதலீடு செய்யலாம்.

காப்பீடு

காப்பீடு

உடல் ஆரோக்கியமே சிறந்த சொத்து என்பதை நாம் மறந்து விடக் கூடாது. விலைவாசி ஏற்றம், மருத்துவச் செலவுகள் உங்கள் சேமிப்பை கரைத்து விடும். ஆகையால் காப்பீடு எடுப்பது அவசியமான ஒன்று.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பங்குச்சந்தை பற்றி சிறிது அறிவு இருந்தால் அதில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாகும். இதில் அனுபவம் இல்லையென்றால், ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள். இந்த வகை முதலீடு நிதி இலாக்காவை பிரித்து செயல்படுத்த உதவும். மேலும் விலைவாசி உயர்வு ஆபத்தில் இருந்து காக்கவும் உதவும். பெண்கள் அதிக ஈட்டுத் தொகையை விரும்புவதை விட பாதுகாப்பை தான் விரும்புவார்கள்.

நிரந்தர வைப்பு நிதிகள்
 

நிரந்தர வைப்பு நிதிகள்

பாதுகாப்பு என்ற அம்சத்தை மனதில் வைத்து, பல பெண்களுக்கு பிடித்த முதலீடாக விளங்குகிறது வங்கியின் நிரந்தர வைப்பு. வைப்பு நிதி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் வருமான வரி பிரிவு 80C-யின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும்.

பி.பி.எப்(PPF)

பி.பி.எப்(PPF)

பி.பி.எப்-ல் பணத்தை முதலீடு செய்தால், பணியில் இருந்து ஓய்வு பெற்றப்பின் அது பெரிதும் உதவும். முதலீடு பாதுகாப்பாக இருக்க மற்றும் ஈட்டுத் தொகையில் வரி இல்லாமல் கிடைக்க விருப்பம் கொண்டவர்கள் இந்த முதலீட்டில் பணத்தை போடலாம்.

மியுச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி(SIP)

மியுச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி(SIP)

தொடர் வைப்புத்தொகைக்கு நிகரானது மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி(SIP). வங்கியின் வைப்பு நிதிகளுக்கு மேலாக லாபம் ஈட்ட வேண்டுமானாலும் அதே போல் பங்குச்சந்தையில் போதிய அனுபவம் இல்லையென்றாலும், மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இதனால் கிடைக்கப் போகும் ஈட்டுத் தொகையில் இடர்பாடு அதிகம்.

பொது ஆலோசனையை

பொது ஆலோசனையை

எந்த ஒரு முதலீடு செய்யும் முன், அந்த முதலீட்டை பற்றிய முழு அறிவையும் பெறுவது மிகவும் அவசியம். அதே போல் அதில் ஏற்படும் இடர்பாடையும் புரிந்து கொள்ளுங்கள். அதனால் முதலீடு செய்யும் முன், நீண்ட கால குறிக்கோள், குறைந்த கால குறிக்கோள் மற்றும் நிதி திட்டத்தையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Few investment mantras for working women

Indian women today are busy. They manage their career as well as raise their family or even may run a business. But they often forget to plan their investment and thus depend on their spouse or father to decide it for them.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X