
இதேபோல் ரூபாய் மதிப்பும் இன்று 20 காசுகள் உயர்ந்து, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.61.62 என்று உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் பணி நிறுத்தத்தின் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிய அதிக வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது, இதனால் பங்கு சந்தையில் 20,108 புள்ளிகளை தொட்டது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 8) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் ரூ.16 உயர்ந்து 2773.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.18 உயர்ந்து ரூ.2966.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்:
சென்னை: ரூ. 27,730
ஹைதராபாத்: ரூ. 27,460
பெங்களூரு: ரூ. 27,400
கொல்கத்தா: ரூ. 27,660
டெல்லி: ரூ. 27,420
மும்பை: ரூ. 27,380


Click it and Unblock the Notifications