இந்தியாவில் பெண் தொழில் முனைவோருக்கு மதிப்பில்லை: ஷாக் சர்வே

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக்சாஸ்: இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் பெண் தொழில் முனைவோருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூடக் அமைத்து தருவதில்லை என்று ஒரு சர்வதேசக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

 

டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரில் டெல் நிறுவனம் நடத்திய பெண் தொழில் முனைவோருக்கான ஒரு நிகழ்ச்சியில் சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. உலகம் முழுவதிலும் 30 நாடுகளில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காதான் நம்பர் ஒன்

அமெரிக்காதான் நம்பர் ஒன்

பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளித்து, அவர்களைத் தூக்கி விடுவதில் அமெரிக்காதான் டாப் என்று இந்த சர்வே கூறுகிறது. சர்வே லிஸ்ட்டில் 83 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டும் அமெரிக்காதான் இந்த சர்வேயில் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு 2-வது இடம்

ஆஸ்திரேலியாவுக்கு 2-வது இடம்

பெண் தொழில் முனைவோருக்கான இந்தக் கணக்கெடுப்பில் 80 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் உள்ளது. ஸ்வீடன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்த மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

இந்தியா 26வது இடம்

இந்தியா 26வது இடம்

இந்த லிஸ்ட்டில் இந்தியா மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு, 26 புள்ளிகளுடன் 26-வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவை விட மோசமான நாடுகள்
 

இந்தியாவை விட மோசமான நாடுகள்

இந்தியாவே மோசமான நிலையில் இருக்கிறது, இந்நியா விட சில நாடுகள் பெண்களுக்கான முன்னுரிமையை அளிக்க தவறுகிறது. இந்த வகையில் நைஜீரியா (29), மொராக்கோ (27), மற்றும் கானா (27) போன்ற நாடுகள் உள்ளது.

பாகிஸ்தான் கடைசி இடம்

பாகிஸ்தான் கடைசி இடம்

இந்தக் கணக்கெடுப்பில் பாகிஸ்தான், பங்களாதேஷ், உகாண்டா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் பெண் தொழில் முனைவோரைக் கண்டு கொள்வதே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்த 4 நாடுகளும் 11 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Most countries continue to be unfriendly for women entrepreneurs

The 2014 Gender-GEDI (Global Entrepreneurship and Development Index) survey has found that three quarters of the 30 countries surveyed do not have "the most fundamental conditions required for female entrepreneurs to prosper".
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X