இந்திய வாடிக்கையாளர்களை காப்பாற்றும் சுவிஸ் வங்கி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெர்ன்: சுவிஸ் வங்கி இந்தியார்கள் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை இந்தியாவிற்கு எப்படி கொண்டுவர வருவது என மண்டையை உடைத்துக் கொண்டு இருக்கும் மத்திய அரசிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களை போலவே உலகின் பல நாட்டவர் தங்கள் அரசிற்கு டேக்கா கொடுத்து நேக்கா சுவிஸ் வங்கியில் பணம், தங்கம், வெள்ளி என ப வகையில் சொத்துக்களை சேர்த்து வந்தனர். ஆனால் இப்போது சுவிஸ் வங்கிக்கும் பிரச்சனை அதிகமானதை தொடர்ந்து இங்கு இருக்கும் பணம் எல்லாம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இந்த வகையில் சுவிஸ் கஜானாக்களில் இருந்து பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளில் 42 சதவீதம் இந்தியர்களுடையதாம்.

(Read: Syndicate Bank shares slump 7 per cent as Chairman arrested for taking bribe)

ஜூன் மாதம் மட்டும்

ஜூன் மாதம் மட்டும்

சுவிஸ் வங்கி வெளியிட்ட சொத்து வெளியேற்ற விபர அறிக்கையில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 26,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நாணயம் மற்றும் கட்டி வடிவிலான தங்கம் மற்றும் வெள்ளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களின் சொத்து மட்டும் 11,000 கோடி ரூபாய் ஆகும்.

இந்தியர்கள் ரொம்ப உசார் தான்...

இந்தியர்கள் ரொம்ப உசார் தான்...

2014ஆம் நிதியாண்டில் மட்டும் சுவிஸ் வங்கியில் இருந்தது 2.15 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களின் சொத்து மதிப்பு 50,000 கோடி ரூபாய்.

தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ்

தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ்

நம்ம தமிழ் சினிமா கிளைமாக்ஸில் கடைசி நேரத்தில் வரும் போலிஸ் அதிகாரிகளை போல, சுவஸ் வங்கியில் இந்திர்களில் பணம் எல்லாம் தீர்ந்த பிறகு தான் நம்ம இந்தியன் கருப்பு பணம் ஒழிப்பு அமைப்பு கடைசி பிளைட்டை பிடித்துதான் போவார்கள் போல தெரிகிறது.

இந்திய அரசு

இந்திய அரசு

சுவிஸ் வங்கி அமைப்பிற்கு இந்திய அரசு (மட்டுமல்ல உலக நாடுகளில் பல) கொடுக்கும் கெடுபிடி தாங்க முடியாமல் சுவிஸ் வங்கி தற்போது தனது பாதுகாப்பு சட்டத்தில் பளவீனம் அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நாட்டவரும் தங்களது சொத்துக்களை பிற பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர். இதில் இந்தியார்கள் முன்னோடி....

நூதனமான பரிமாற்றம்

நூதனமான பரிமாற்றம்

இந்த கெடுபிடியான நிலையில் சுவிஸ் வங்கியின் வாடிக்கையாளர்களை காப்பாற்றும் நோக்கத்துடனும் வாடிக்கையாளர் பெயர் வெளி வராத முறையில் தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் அல்லது வைரங்கள் ரூபத்தில் வாடிக்கையாளரின் பிற நாட்டு கணக்குகளுக்கும் மாற்றி வருகிறது. இதனால் சுவிஸ் வர்த்தகத்தில் கடந்த சில மாதங்களில் தங்கம், வெள்ளி, மற்றும் வைரம் முக்கிய இடம் வகிக்கிறது.

பணச் சலவை

பணச் சலவை

பணத்திற்கும் பதிலாக தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அளிக்கும் முறையை கருப்பு பணம் உலகில் "லேயரிங்" என் அழைக்கப்படுகிறது. பணச் சலவையில் இது முதல் படி...

இந்தியா தான் டாப்

இந்தியா தான் டாப்

தங்கம் பிரியர்கள் அல்ல வெறியர்களாக இந்தியார்களை விட்ட யார் இருக்கும். சுவிஸ் வங்கி லேயரிங் முறையில் அதிகளவில தங்கம் மற்றும் வைரங்களை பரிமாற்றும் செய்த நாடுகளில் இந்தியா தான் டாப். இந்தியாவை தொடர்ந்து துருக்கி, அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiss gold exports to India rise to 42%; hit Rs 50k crore

As a debate continues on alleged black money stashed by Indians in Swiss banks, India now accounts for nearly 42 per cent of total gold and silver leaving Switzerland shores — largest for any single country.
Story first published: Monday, August 4, 2014, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X