டெல்லி: 20,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய சகாரா குரூப் நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களின் டெல்லி மற்றும் நொய்டா பகுதிகளில் இருக்கும் அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் வருமான வரித்துறையினருக்கு 135 கோடி ரூபாய் பணம் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கிடைத்துள்ளது.
எல்லாமே பொதுத்துறை வங்கிக்கு தான்...
சகாரா குழுமம் தலைவர்களுக்கும் அபராத தொகை செலுத்த அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு அவர்களின் உடைமைகள் மற்றும் சொத்துகளை தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இச்சோதனையில் கிடைத்த அனைத்து பொருட்களும் டெல்லி உள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கு அளிக்கப்படும் என வருமான வரித்துறையின் தெரிவித்துள்ளனர்.
தோராயமான அளவுகள்
மேலும் வருமான வரித் துறை அதிகாரி ஒரு கூறுகையில் குறிப்பிட தொகை அனைத்தும் தோராயமான அளவுகள் தான், ஆனால் சோதனையில் சிக்கிய அனைத்தும் மத்திய வங்கிக்கு கொண்டு சேர்க்கப்படும் என உறுதி அளித்தார்.
சொத்துகள் முடக்கம்..
இவ்வழக்கும் துவங்கிய சில நாட்களிலேயே இந்நிறுவனத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரின் கணக்குள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டது. இதன்பேரில் தற்போது முடக்கப்பட்ட சொத்துகளை சோதனை செய்து வருவதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
சகாரா குழுமம்
இது குறித்து இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தற்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனத்தை நடத்தவும், அபராத தொகையை செலுத்தவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறோம். மேலும் வங்கிகளில் இருந்து தற்போது கடன் தொகை கிடைப்பது மிகவும் கடினம். இப்படி இருக்கும் போதும் செபி எந்த கணக்கை எப்போதும் முடக்கும் என்பது தெரியாத நிலையில் இருக்கிறோம். என்று அவர் கூறினார்.
தகவல்
மேலும் வருமான வரித் துறைக்கும் நவம்பர் 22ஆம் தேதி சோதனை நடத்தப்பட்ட டெல்லி மற்றும் நொய்டா பகுதியில் கணக்கிடப்படதாக பெரும் தொகை குவிந்துள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்திருந்தது. இதன் படியே சோதனையும் நடந்துள்ளது.
அன்னிய பரிமாற்றம்
மேலும் மத்திய வரி வாரியம் இந்நிறுவனம் ஹவாலா மோசடியில் ஈடுப்பட்டு உள்ளதா என்பதையும் விசாரித்த வண்ணம் உள்ளது.
கருப்பு பணம்
மேலும் இச்சோதனை வழக்கை மத்திய கருப்பு பணம் ஒழிப்பு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது.
சொகுசான ஜெயில் வாழ்க்கை
மக்களின் பணத்தை சுருட்டிய இந்நிறுவனத்தின் மூன்று நிர்வாக இயக்குனர்களுக்கும் டெல்லி திகார் ஜெயிலில் 31 இலட்ச ரூபாய் செலவில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இதை பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications