டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் பெயில் மூலம் வெளியில் வர சுப்ரீம் கோர்ட் செபியிடம் 5,000 கோடி ரூபாய் பணமாகவும், 5,000 வங்கி பிணையத்தை அளிக்க வேண்டும் உத்தரவிட்டது. இதன் படி இந்நிறுவனம் உள்ளநாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை விற்க தற்போது முயற்சி செய்து வருகிறது.
இந்நிதியை திரட்ட முடியாமல் இந்நிறுவனம் திணறி வருகிறது. இந்நிலையை இந்நிறுவனத்தின் வெளிநாட்டு சொத்துக்களை விற்று நிதியை திரட்ட 4 வார கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது.

மேலும் வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை விற்க இந்நிறுவனம் டாச் பென்ஷன் பன்ட், பைனான்ஸிங் டிரஸ்ட் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சஹாரா நிறுவனம் இந்த 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட கடந்த 80 மாதமாக வெளிநாட்டி வங்கிகள் மற்றும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications