சென்னை: அமெரிக்கப் பாலிஸி மறுஆய்வு அறிவிப்புகள் சந்தை கணிப்புகளை ஈடுசெய்யாத காரணத்தினாலும், வட்டி விகித்தை உயர்த்தும் வாய்ப்புகள் குறைந்ததாலும் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நியூயார்க் பங்குச் சந்தை குறைந்த அளவிலான உயர்வை மட்டும் பதிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 2,733 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் அதிகரித்து 2,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய மும்பை நாணயச் சந்தை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 575 ரூபாய் அதிகரித்து 37,485 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனை சந்தையில் தங்கத்தின் விலை நிலவகங்களைத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications